நிரம்பியது பில்லுார் அணை: பவானியில் வெள்ளம்

Added : செப் 11, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:பில்லுார் அணை நிரம்பியதை அடுத்து வினாடிக்கு, 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், காரமடை வனப்பகுதியில், 100 அடிஉயரத்தில் பில்லுார் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, 97 அடிக்கு நீர் மட்டம் உயரும்போது, தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். தற்போது, அணையின் நீர் பிடிப்பு
நிரம்பியது பில்லுார் அணை: பவானியில் வெள்ளம்

மேட்டுப்பாளையம்:பில்லுார் அணை நிரம்பியதை அடுத்து வினாடிக்கு, 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், காரமடை வனப்பகுதியில், 100 அடிஉயரத்தில் பில்லுார் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, 97 அடிக்கு நீர் மட்டம் உயரும்போது, தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். தற்போது, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் வந்ததை அடுத்து நீர்மட்டம், 97 அடியாக உயர்ந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 7,000கன அடியாக நீர் அதிகரித்தது. அதனால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதையும், நான்கு மதகுகளில், 4,000 கன அடியும், மின் உற்பத்திக்கு, 3,000 கன அடியும்என, 7,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X