1 கோடி மரக்கன்றுகள் நடவு: வனத்துறை அமைச்சர் தகவல்

Added : செப் 11, 2022 | |
Advertisement
திருச்சி;'தமிழகத்தில், 24 சதவீதமாக உள்ள வனப்பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.திருச்சி மாவட்டம், சிறுகனுார் அருகே, எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தை, பார்வையிட்ட அமைச்சர் அளித்த பேட்டி:மத்திய அரசு, வன உயிரியல் பூங்காக்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்குவதில்லை.

திருச்சி;'தமிழகத்தில், 24 சதவீதமாக உள்ள வனப்பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.திருச்சி மாவட்டம், சிறுகனுார் அருகே, எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தை, பார்வையிட்ட அமைச்சர் அளித்த பேட்டி:மத்திய அரசு, வன உயிரியல் பூங்காக்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்குவதில்லை. திருச்சியில் வன உயிரியல் பூங்கா அமைக்க, 2009ல் பணி தொடங்கப்பட்டது.அங்கு, கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 5 கி.மீ., சுற்றளவுக்கு, 85 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.அதை மேம்படுத்த, மத்திய விலங்கு காட்சியக ஆணையத்திடம் நிதி கேட்டுள்ளோம். நிதியை பெற்று, விரைவாக பணிகள் நடைபெறும்.நீலகிரி மாவட்டம், முதுமலையில், 28 யானைகளும், கோவையில், 26 யானைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தனியார் முறையாக பராமரிக்காத எட்டு யானைகள் மீட்கப்பட்டு, எம்.ஆர்.பாளையத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் வனப்பரப்பு, 24 சதவீதமாக உள்ளது. அடுத்த, 10 ஆண்டுகளில், 33 சதவீதமாக இதை உயர்த்த முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி, இந்த ஆண்டு இரண்டரை கோடி மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டில் இருந்து, மாவட்டத்திற்கு, 1 கோடி மரக்கன்றுகள் நடவும் திட்டமிட்டுள்ளோம்.திருச்சி மாவட்டம், சோபனாபுரத்திலிருந்து பச்சைமலை வரை, 25 கி.மீ., துாரம் சாலை அமைக்க, மலைவாழ் மக்களுக்கான மேம்பாட்டு துறை, நெடுஞ்சாலை துறைக்கு கோப்பு அனுப்பி உள்ளோம்.விரைவில், அங்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வன உயிரினங்கள், விளைப்பயிர்களை நாசமாக்குவதை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை தாக்கல் செய்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X