மாணவியருக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 5 'ஆண்டு'

Added : செப் 11, 2022 | |
Advertisement
தர்மபுரி-தர்மபுரியில், 'போக்சோ' வழக்கில் கைதான பள்ளி தலைமை ஆசிரியருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றியவர் சந்திரசேகரன், 62. இவர், பள்ளி மாணவியருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இது தொடர்பாக, 2016 மார்ச்சில், உதவித்தொடக்க கல்வி அலுவலர்



தர்மபுரி-தர்மபுரியில், 'போக்சோ' வழக்கில் கைதான பள்ளி தலைமை ஆசிரியருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றியவர் சந்திரசேகரன், 62. இவர், பள்ளி மாணவியருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இது தொடர்பாக, 2016 மார்ச்சில், உதவித்தொடக்க கல்வி அலுவலர் பழனியம்மாள், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, சந்திரசேகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி சையத்பர்கத்துல்லா, மாணவியருக்கு தொடர் பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் சந்திரசேகரனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்புவழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X