வாலிபர்களுக்கு 'தர்ம அடி'

Added : செப் 11, 2022 | |
Advertisement
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பெரியார் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து, ரேஷன் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளுக்கு ஏற்றி செல்ல தினசரி 50க்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன.பெரும்பாலான லாரிகளை, இரவு நேரங்களில் குடோன் அருகே உள்ள காலி மனையில் டிரைவர்கள் நிறுத்திச்

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பெரியார் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து, ரேஷன் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளுக்கு ஏற்றி செல்ல தினசரி 50க்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன.பெரும்பாலான லாரிகளை, இரவு நேரங்களில் குடோன் அருகே உள்ள காலி மனையில் டிரைவர்கள் நிறுத்திச் செல்வது வழக்கம். கடந்த ஒரு மாதத்தில் பெரியார் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், விருத்தாசலம் பெரியார் நகரில் நேற்று அதிகாலை, இரண்டு வாலிபர்கள், லாரியில் இருந்து பேட்டரியை திருடும்போது, பொதுமக்கள் பிடித்து, கட்டி வைத்து 'தர்ம அடி' கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X