பவானிசாகர் நீர்வரத்து6,800 கன அடியாக அதிகரிப்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
புன்செய்புளியம்பட்டி:நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 6,800 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி. எம். சி., கொள்ளளவு கொண்டது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையில் தற்போதைய நீர்மட்டம், 102 அடியாக உள்ளது. பவானிசாகர்

புன்செய்புளியம்பட்டி:நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 6,800 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி. எம். சி., கொள்ளளவு கொண்டது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையில் தற்போதைய நீர்மட்டம், 102 அடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 4,100 கன அடியாக இருந்த நீர்வரத்து,நேற்று, 6,800 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில், 2,250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று முதல் உபரி நீர் திறப்பு, 4,850 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக, 1,750 கன அடி என மொத்தம், 6,600 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தும், வெளியேற்றமும் ஒரே அளவில் நீடிப்பதால் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக அணை நீர்மட்டம், 102 அடியில் நீடிக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X