மனைவி கொலை: கணவன் கைது

Added : செப் 11, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை-மனைவியை கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தை பெர்னாந்த், 35; அவரது மனைவி ஆரோக்கிய மேரி, 28. ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமான தம்பதிக்கு, சூசன்னா, 5, என்ற பெண் குழந்தை உள்ளது.சிங்கப்பூரில் வேலை பார்த்த குழந்தை பெர்னாந்த், சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். கணவன் -



புதுக்கோட்டை-மனைவியை கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தை பெர்னாந்த், 35; அவரது மனைவி ஆரோக்கிய மேரி, 28. ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமான தம்பதிக்கு, சூசன்னா, 5, என்ற பெண் குழந்தை உள்ளது.சிங்கப்பூரில் வேலை பார்த்த குழந்தை பெர்னாந்த், சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டதால், ஆரோக்கியமேரி கடந்த மாதம் வீட்டின் சமையல் அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.வடகாடு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.,வும் விசாரணை மேற்கொண்டார். ஆலங்குடி டி.எஸ்.பி., தீபக் ரஜினி நடத்திய தீவிர விசாரணையில், ஆரோக்கியமேரியை, கணவர் குழந்தை பெர்னாந்த் கொலை செய்தது தெரியவந்தது.நேற்று முன்தினம் இரவு, வடகாடு போலீசார் குழந்தை பெர்னாந்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.10.9.22: புதுக்கோட்டை : மீனாட்சிசுந்தரம் : 9842653439 படம் உண்டு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X