யார் குற்றமோ... பயணிகளை குழப்பும் பஸ் பெயர் பலகை

Added : செப் 11, 2022 | |
Advertisement
திண்டுக்கல்,-திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ்களின் பின் பகுதியில் மாற்றப்படாத பெயர் பலகை ,பெயர் பலகையே இல்லாத அரசு பஸ்களால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.பஸ் அருகிலே காத்திருந்தும் பஸ்களை தவறவிடும் அவலநிலையும் போக்குவரத்து கழக நடத்துனர்கள் அலட்சியத்தால் அவ்வப்போது அரங்கேறுகிறது.மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் அரசு பஸ்களையே அதிகம் பயன் படுத்துகின்றனர்.
 யார் குற்றமோ...   பயணிகளை  குழப்பும் பஸ் பெயர் பலகை

திண்டுக்கல்,-திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ்களின் பின் பகுதியில் மாற்றப்படாத பெயர் பலகை ,பெயர் பலகையே இல்லாத அரசு பஸ்களால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.பஸ் அருகிலே காத்திருந்தும் பஸ்களை தவறவிடும் அவலநிலையும் போக்குவரத்து கழக நடத்துனர்கள் அலட்சியத்தால் அவ்வப்போது அரங்கேறுகிறது.

மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் அரசு பஸ்களையே அதிகம் பயன் படுத்துகின்றனர். குறிப்பிட்ட பஸ்களில் பெண்களுக்கு இலவசம், டூவிலர்,ஆட்டோக்களில் செல்வதை விட செலவு குறைவு என்பதால் பஸ்களில் அதிகம் பயணிக்கின்றனர்.பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து புறப்படும் சில பஸ்களில் உள்ள பெயர் பலகைகளில் ஊர் பெயர் மாற்றப்படாமல் பயணிகள் பெரும் பாதிப்பினை சந்திக்கின்றனர். செல்லும் இடத்திற்கான பெயர் பஸ்சின் முன் பகுதியில் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் பின் பகுதியில் பெரும்பாலும் பெயர் பலகைகள்மாற்றப்படுவதில்லை. பெயர் பலகையில் ஊர் பெயர் தவறாக உள்ளதால் பயணிக்க வரும் பயணிகள் குறிப்பிட்ட அந்த பஸ்சின் அருகிலே காத்திருக்கின்றனர். பஸ் புறப்பட்டு செல்ல நெடுந்நேரம் பின் அருகில் இருந்த பஸ்தான் காத்திருந்த பஸ் என்பதை அறிந்து அவதிப்படுகின்றன. சில பஸ்கள் முதல் டிரிப் ஒரு ஊருக்கும் அடுத்த டிரிப் மற்றொரு ஊருக்கும் செல்லும் போது ,பெயர் பலகை மாற்றாதால் பஸ்சில் ஏறும் பயணிகளுடன் நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கிறது. சில பஸ்கள் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பி சிறிது துாரம் சென்றபின் பயணிகள் டிக்கெட் கேட்க ,தவறை புரிந்து கொள்ளும் நடத்துனர் பெயர் பலகையை மாற்றுகிறார்.இது போன்ற தவறுகளை களைய நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.....................நெரிசலால் அவதிபஸ் ஸ்டாண்டில் பயணிகள் பெரும்பாலும் அங்குள்ள கடைகளின் முன் பகுதியில் நிற்கின்றனர். அவ்வாறு நிற்பவர்கள் பஸ் பின் புறம் உள்ள பெயர்பலகையை பார்த்துதான் பஸ் ஏறுகின்றனர். பெயர் மாற்றப்படாத பெயர் பலகையால் பலர் பஸ்களை தவறவிடுகின்றனர். முன்பகுதியிலும் கூட பஸ் கிளம்பும் போது பெயர் மாற்றி உடனே கிளம்புவதால் பயணிகள் ஏறும் போது நெரிசலில் சிக்குகின்றனர்.பல பஸ்களில் பின்புறம் பெயர் பலகை தெரியாத அளவிற்கு கண்ணாடிகள் நிறம்மாறியிருப்பதால் பஸ் அருகில் நின்றாலும் எங்கு செல்கிறது என்று தெரியாமல் பஸ்சை தவறவிடுவதும் தொடர்கிறது.வீரமணி, அரசு தொடர்பு பிரிவு செயலாளர், பா.ஜ., சீலப்பாடி, திண்டுக்கல்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X