துபாயில் இருந்து தங்கம் கடத்திவந்தவர் ஏமாற்றியதால் தாக்கிய கும்பல் கைது

Added : செப் 11, 2022 | |
Advertisement
சென்னை:துபாயில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை கொடுக்காமல், மோசடி செய்த நபரை கடத்தி, விடுதியில் கட்டிப் போட்டு தாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.அரும்பாக்கம், 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதியில், கடந்த 8ம் தேதி, நபர் ஒருவர் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து, அங்கிருந்தவர்கள் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவத்தனர். சம்பவ இடத்தை போலீசார் ஆய்வு செய்த
துபாயில் இருந்து தங்கம் கடத்திவந்தவர் ஏமாற்றியதால் தாக்கிய கும்பல் கைது

சென்னை:துபாயில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை கொடுக்காமல், மோசடி செய்த நபரை கடத்தி, விடுதியில் கட்டிப் போட்டு தாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அரும்பாக்கம், 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதியில், கடந்த 8ம் தேதி, நபர் ஒருவர் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து, அங்கிருந்தவர்கள் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவத்தனர். சம்பவ இடத்தை போலீசார் ஆய்வு செய்த போது, விடுதியில் உள்ள ஓர் அறையில், ஒருவரை கட்டிப்போட்டு, ஐந்து பேர் கும்பல் சரமாரியாக தாக்கி கொண்டிருந்தனர்.\
பாதிக்கப்பட்டவரை மீட்டு சிகிச்சை அளித்து, ஆறு பேரிடமும் போலீசார் விசாரித்தனர். போலீசார் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே., பேட்டையைச் சேர்ந்தவர், ஆனந்தராஜ், 34. துபாயில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவர். சமீபத்தில் சென்னை திரும்பிய ஆனந்தராஜிடம், துபாயில் இருந்த மர்மநபர் மின் சாதனத்தை கொடுத்துள்ளார்.
அதில், 400 கிராம் மதிப்புள்ள தங்கம் இருப்பதாகவும், தன் உறவினர் இதயத்துல்லா என்பவரிடம் கொடுத்து விடுமாறும் கூறியுள்ளார். இதற்காக கமிஷன் தொகையும் கொடுத்துள்ளார். தங்கம் பதுக்கி வைத்திருந்த பொருளை, ஆனந்த்ராஜ் சென்னைக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால், அந்த பொருளை சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுக்காமல், தலைமறைவாகியுள்ளார். \
இதையடுத்து காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இதயதுல்லா, 40, தலைமறைவாக இருந்த ஆனந்தராஜை கண்டுபிடித்து, காரில் கடத்தி சென்றுள்ளார். பின், அரும்பாக்கம் பகுதியில் அறையில் கட்டி வைத்து, கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார். ஆனந்தராஜை கடத்தி சென்று தாக்கிய, இதயதுல்லா, 40, அவரது கூட்டாளிகள் காரைக்காலை சேர்ந்த பாலகன், 29, ராணிபேட்டையைச் சேர்ந்த ரவிகுமார், 38, தினேஷ், 28 மற்றும் நவீன்குமார், 25, ஆகிய ஐந்து பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார், ஐந்து மொலை போன்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X