மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது ரூ.55 முதல் ரூ.1130 வரை 'அழ' வேண்டியிருக்கும்

Added : செப் 11, 2022 | |
Advertisement
கட்டணத்தை உயர்த்தக்கூடாதுமணிமாறன், மடீட்சியா முன்னாள் தலைவர்:சிறு, குறு நிறுவனங்களுக்கு மின்கட்டணம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வால் தயாரிப்பு பொருட்களில் 50 சதவீத விலையை அதிகரித்துள்ளோம். 2020ல் சலவை சோப்பு கிலோ ரூ.42க்கு விற்றோம். இப்போது ரூ.70 வரை உயர்த்த வேண்டியுள்ளது. மின் கட்டண உயர்வால் மீண்டும் விலை கூடும். இதனால் நஷ்டம் தான்.
மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது ரூ.55 முதல் ரூ.1130 வரை 'அழ' வேண்டியிருக்கும்



கட்டணத்தை உயர்த்தக்கூடாது

மணிமாறன், மடீட்சியா முன்னாள் தலைவர்:சிறு, குறு நிறுவனங்களுக்கு மின்கட்டணம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வால் தயாரிப்பு பொருட்களில் 50 சதவீத விலையை அதிகரித்துள்ளோம். 2020ல் சலவை சோப்பு கிலோ ரூ.42க்கு விற்றோம். இப்போது ரூ.70 வரை உயர்த்த வேண்டியுள்ளது. மின் கட்டண உயர்வால் மீண்டும் விலை கூடும். இதனால் நஷ்டம் தான். ஒரு கிலோவாட்டுக்கு நிரந்தர கட்டணம் ரூ.60 ஆக இருந்ததை ரூ.100 ஆக உயர்த்தியதால் 100 கிலோவாட் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.பல ஆயிரமாக கட்டணம் உயர்ந்து விடும். இதுதவிர டெபாசிட் கட்டணம் தனியாக வாங்குகின்றனர். மின்கட்டணம் ரூ.20 ஆயிரமாக செலுத்திய நிலையில் இம்மாதத்தில் ரூ.30ஆயிரம் வரை கட்ட வேண்டியுள்ளது. நிரந்தர கட்டணத்தை உயர்த்தக்கூடாது.தன்னிச்சையான கட்டண உயர்வுஜெகதீசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர்:சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்துகிறோம். எங்களுக்கு காலை, மாலை 6:00 - 10:00 மணி வரை கூடுதல் மின்கட்டணம் என்பதை ரத்து செய்ய வேண்டும். பழைய முறைப்படி 50 கிலோவாட்டுக்கு கீழ் இருந்தால் ரூ.35, அதற்கு மேல் எனில் ரூ.70 என்ற விகிதத்தை மாற்றக்கூடாது. இதனால் கட்டணம் கடுமையாக உயர்ந்து பொருட்களின் விலையேற்றம் அதிகரிக்கும். நுகர்வோர் பாதிக்கப்படுவர். கருத்து கேட்பு கூட்டம் பெயருக்கு நடத்திவிட்டு அரசு தன் இஷ்டத்திற்கு தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது.மாதம் ஒருமுறை 'ரீடிங்' எடுங்கஷீலா கிருஷ்ணா, தனியார் வங்கி அலுவலர்புதிய நடைமுறைப்படி 200 யூனிட் வரை இருந்தால் ரூ.55 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது 2 மாதத்திற்கு 600 யூனிட்டுகள் செலவாகிறது. புதிய கட்டண முறைப்படி ரூ.310 கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதையே மாதந்தோறும் 'ரீடிங்' எடுத்தால் மின்கட்டணம் குறையும். தொழிற்சாலைகளில் உள்ளது போல மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறையை அரசு கொண்டு வந்தால் கட்டண சுமை குறையும்.வீட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படும்பூர்ணிமா, தனியார் நிறுவனம்கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இப்போது தான் மீண்டு வருகிறோம். அதற்குள் மின்கட்டண உயர்வு என்றால் சுவிட்சை தொடவே பயமாக உள்ளது. பால் விலை, காஸ் விலை என மாதந்தோறும் பட்ஜெட் கூடிக் கொண்டே செல்கிறது. இதில் மின்கட்டணமும் கூடுதலென்றால் சாமானியர்கள் எப்படி வாழ்வது. அதிகரிக்கும் விலைவாசிக்கு ஏற்ப சம்பளம் உயர்வதில்லையே. பின் எப்படி பட்ஜெட்டுக்கு ஏற்ப வாழ முடியும். இவ்வாறு கூறினர்.

மின் கட்டணத்தை குறைப்பது எப்படி

* ஆள் இல்லாத அறையில் மின்விசிறி, விளக்கு பயன்பாட்டை தவிர்க்கவும்* தேவையில்லாத நேரத்தில் கூடுதல் மின்விளக்குகளை பயன்படுத்த வேண்டாம்* அதிக மின்னாற்றல் தரக்கூடிய ஏ.சி., பிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.* மின்சாதன பொருட்களை பயன்படுத்தாதபோது அதன் மெயின் சுவிட்ச் 'ஆப்' செய்யப்பட்டிருக்க வேண்டும்.* சோலார் மின்விளக்குகள், மின்சாதன பொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்கலாம்* குறைந்த மின் செலவை தரக்கூடிய விளக்கு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தலாம்



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X