'சொக்கா... உமக்கே சோதனையா...' விக்கிரமங்கலம் சிவன் கோயில் புனரமைப்பு எப்போது

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை, -சோழவந்தானில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் உள்ள பழமையான விக்கிரமங்கலம் வி.கோவில்பட்டி சிவன் கோயிலின் உட்புற சுவர்களில் மழைநீர் கசிந்தும் வெளிப்புற கற்சுவர்கள் வெளியே நீட்டியும் பாதுகாப்பின்றி உள்ளது.சோழர், பாண்டிய கால வரலாற்றை எடுத்துக் காட்டும் சிறப்புமிக்க மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவள்ளி கோயில் பழமையானது. இங்குள்ள சிற்பங்கள் 11 முதல் 12ம் நுாற்றாண்டைச்
'சொக்கா... உமக்கே சோதனையா...' விக்கிரமங்கலம் சிவன் கோயில் புனரமைப்பு எப்போது



மதுரை, -சோழவந்தானில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் உள்ள பழமையான விக்கிரமங்கலம் வி.கோவில்பட்டி சிவன் கோயிலின் உட்புற சுவர்களில் மழைநீர் கசிந்தும் வெளிப்புற கற்சுவர்கள் வெளியே நீட்டியும் பாதுகாப்பின்றி உள்ளது.

சோழர், பாண்டிய கால வரலாற்றை எடுத்துக் காட்டும் சிறப்புமிக்க மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவள்ளி கோயில் பழமையானது. இங்குள்ள சிற்பங்கள் 11 முதல் 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை.கருவறை, அர்த்தமண்டப துாண்களில் மிகச்சிறிய வடிவில் மயில், குரங்கு, நாகம், பறவை, வாலி வழிபடுதல், சிவனை வணங்கும் அனுமார், சிவலிங்கத்தை நிமிர்த்திய குங்கிலிய நாயனார், கண்ணை தோண்டி வைத்த கண்ணப்ப நாயனார் உட்பட 375 நுணுக்கமான சிற்பங்கள் பிரமிக்க வைக்கின்றன. இந்திய தொல்லியல் துறையால் ஒன்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மேற்கூரைகளில் கஜலட்சுமி மோட்சம், யசோதை மோர் கடையும் சிற்பம் உட்பட பல்வேறு உருவங்கள் செதுக்கப்பட்டு கருப்படித்து மங்கி போயுள்ளன.கோயிலின் வரலாறு அறியாதவர்கள் கல்வெட்டுகளின் மீது தங்களது பெயர்களை ஆங்காங்கே கிறுக்கியுள்ளனர்.

வெளிப்பகுதியில் செவ்வக வடிவ கருங்கற்கள் உள்ளிருந்தே வெளியேறி தடம்மாறி நிற்கின்றன. கோயிலின் படிக்கட்டில் விலங்கு உருவ பாறைக்கல் உடைந்த நிலையில் சிமென்ட் வைத்து பூசியுள்ளனர். பக்கவாட்டில் அம்மன் கோயில் இடிந்துள்ளது. அறிநிலையத் துறை சார்பில் இக்கோயிலை புனரமைக்க ரூ.1.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பணிகள் எப்போது துவங்கும் எனத்தெரியவில்லை. புனரமைப்பை விரைவில் மேற்கொண்டு பழமையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202211:39:48 IST Report Abuse
Save India from Idiots களுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை?
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
11-செப்-202206:44:46 IST Report Abuse
சீனி தட்டிக்கேட்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X