மண்ணை ஆசைக்கு தின்கிறதா அள்ளித் தின்கிறதா; ரத்தசோகை, மனநல குறைபாடாக இருக்கலாம்

Added : செப் 11, 2022 | |
Advertisement
மதுரை -மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கல், மண்ணைத் தின்ற நிலையில் உடல்நலம் பாதித்து இறந்தார். 'இரும்புச்சத்து குறைபாடு இருந்தாலோ மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலோ குழந்தைகள் மண்ணை தின்பர்' என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறைத் தலைவர் டாக்டர் பாலசங்கர்.அவர் கூறியதாவது: குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் நாவில் சுவை

மதுரை -மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கல், மண்ணைத் தின்ற நிலையில் உடல்நலம் பாதித்து இறந்தார்.

'இரும்புச்சத்து குறைபாடு இருந்தாலோ மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலோ குழந்தைகள் மண்ணை தின்பர்' என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறைத் தலைவர் டாக்டர் பாலசங்கர்.அவர் கூறியதாவது: குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் நாவில் சுவை மாறும். மனநலம், மூளைவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தால் மண்ணை அள்ளித் தின்பர். காரணமே தெரியாமல் சில குழந்தைகள் திடீரென மண், கல், குச்சி, ரப்பர், பென்சில், சாக்பீசை கடித்து தின்பர். சுவர் பெயின்டை சுரண்டி தின்பர். தினமும் தின்னும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.நடக்க ஆரம்பித்த பின் 4 அல்லது 5 வயது வரை குழந்தைகள் இச்செயலில் ஈடுபடும். எதனால் மண்ணை தின்கிறது, எதனால் சுவை மாறியது என்பதை கண்டுபிடிக்க முடியாது.

இரும்புச்சத்தை கணக்கிடுவதன் மறைமுக முறையே ஹீமோகுளோபின் தான். குழந்தைகளுக்கு 15 கிராம் அளவில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். 11 வரை பரவாயில்லை. அதை விட குறைந்தால் அனீமியா. ரத்தசோகை ஏற்பட்டால் குழந்தைகள் துறுதுறுவென விளையாடாமல் சோர்வாக இருப்பார். படிப்பில் கவனம் குறையும். மண்ணை தின்றால் சில நேரம் வாந்தி, பேதி வரலாம். குடற்புழுக்கள் உருவாகும். இது சிறிய பிரச்னை தான். ஆரம்பத்திலேயே சரிசெய்து விடலாம். இவ்வாறு கூறினார்.


மட்டன், கீரை, கேழ்வரகு, நாட்டுச்சர்க்கரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நாட்டு சர்க்கரையுடன் எள், நிலக்கடலை சேர்த்து மிட்டாயாக கொடுத்தால் புரோட்டீன் சத்தும் கூடுதலாக கிடைக்கும். குழந்தைகளும் இனிப்பாக சாப்பிடுவதை விரும்புவர். டாக்டர் ஆலோசனை படி இரும்புச்சத்து டானிக் 3 மாதம் கொடுக்க வேண்டும்.

எதில் சத்துள்ளது



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X