வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வழக்கமாக தமிழகத்தின் புதிய கவர்னராக யார் நியமிக்கப்பட்டாலும், 'நான் தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்' என சொல்வார். இரண்டு மாதங்களுக்கு பின் கவர்னரும் இதை மறந்துவிடுவார், மக்களும் மறந்துவிடுவர்.
![]()
|
ஆனால் தற்போதைய கவர்னர் ஆர்.என்.ரவி அப்படியல்ல. அவர் தீவிரமாக தமிழ் கற்று வருகிறாராம். மிக விரைவில் தமிழில் பேசும் அளவுக்கு, அவருக்கு 'கிராஷ் கோர்ஸ்' கற்றுத் தரப்படுகின்றதாம்.இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல மக்கள் நல திட்டங்களின் விபரங்களையும், அதன் நன்மைகளையும் தமிழக மக்களுக்கு சரியான முறையில் யாரும் தெரிவிப்பதில்லை.
![]()
|
சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு ரேஷன் கடையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு மக்களுக்கு எவ்வளவு அரிசி வழங்குகிறது என்பதை விளக்கியதோடு, மாவட்ட கலெக்டரையும் ஒரு பிடி பிடித்தார்.இதே போல தமிழகத்திலும், கவர்னர் ரவி மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி அவர் போகும் இடங்களில் எல்லாம் தமிழில் பேச வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகின்றாராம்.
இதனால் தான் கவர்னர் அதிரடியாக தமிழ் கற்று வருகின்றாராம். இலக்கண சுத்தமாக தமிழ் பேச முடியாவிட்டாலும் ஏழை, எளிய மக்களுக்கு புரியும் தமிழில் பேசினால் போதும் என்கின்றாராம் பிரதமர்.