ஆரணி ஆறு கரைகளை சீரமைக்காததால் மக்கள்...அச்சம்!

Added : செப் 11, 2022 | |
Advertisement
உடைந்து 10 மாதங்கள் கடந்தும் அலட்சியம்ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கர்ணித் மலை பகுதியில் துவங்கும் ஆரணி ஆறு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக, பழவேற்காடு கடலில் முடிகிறது. ஆறு பயணிக்கும் வளைவு பகுதிகளில் மழைக்காலங்களில் கரைகள் உடைப்பு ஏற்படுகின்றன.கடந்த ஆண்டு, கன மழை மற்றும் பிச்சாட்டூர் அணையில் இருந்து வெளியேறிய அதிகப்படியான தண்ணீரால்,
ஆரணி ஆறு கரைகளை சீரமைக்காததால் மக்கள்...அச்சம்!


உடைந்து 10 மாதங்கள் கடந்தும் அலட்சியம்ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கர்ணித் மலை பகுதியில் துவங்கும் ஆரணி ஆறு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக, பழவேற்காடு கடலில் முடிகிறது. ஆறு பயணிக்கும் வளைவு பகுதிகளில் மழைக்காலங்களில் கரைகள் உடைப்பு ஏற்படுகின்றன.

கடந்த ஆண்டு, கன மழை மற்றும் பிச்சாட்டூர் அணையில் இருந்து வெளியேறிய அதிகப்படியான தண்ணீரால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.லட்சுமிபுரம், ரெட்டிப்பாளையம் அணைக்கட்டுகள் நிரம்பி, 25 ஆயிரம் கன அடி உபரி நீர் பழவேற்காடு ஏரி வழியாக கடலுக்கு சென்றது.வெள்ள நீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதால், பெரும்பேடுகுப்பத்தில், 200 மீட்டர் நீளத்திற்கு கரைகள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களுக்குள் புகுந்தது.

இதனால், பெரும்பேடு குப்பம், வஞ்சிவாக்கம், போலாச்சியம்மன்குளம், ஆசானபூதுார்மேடு, அச்சரப்பள்ளம் உள்ளிட்ட எட்டு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.மேற்கண்ட கிராமங்களில், சம்பா பருவத்திற்கு பயிரிடப்பட்டிருந்த, 1,850 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாழாயின. கடந்த, 2015, 2017ம் ஆண்டுகளிலும் இதே போன்று கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்பட்டது.ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நேரங்களில் கரை உடைந்து பெரும் பாதிப்புகள் ஏற்படுவதால் கிராமவாசிகள் பொருளாதார இழப்புகளுக்கு ஆளாகின்றனர்.

கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில், வெள்ள நீர் குறைந்த பின், மணல் மற்றும் சாம்பல் கழிவுகள் கொண்ட மூட்டைகள் போட்டு தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டது. கரை உடைப்பு ஏற்பட்டு, 10 மாதங்கள் ஆன நிலையில், அங்கு தற்காலிக நிலையே தொடர்கிறது.மணல் மூட்டைகளும் தற்போது முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அவை எளிதாக தண்ணீரில் கரைந்து மீண்டும் உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது.கடந்த ஜூலை மாதம் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு, கான்கிரீட் சுவர் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், அதற்கான எவ்வித பணிகளும் அங்கு நடைபெறாத நிலையில் பாதிப்புகளை எண்ணி விவசாயிகள், கிராமவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.



பலவீனம்


இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:பெரும்பேடுகுப்பத்தில் உள்ள கரைகள் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு மழையின்போது அச்சத்துடன் இருக்கிறோம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் விவசாயம் செய்து வரும் நிலையில், அதுவும் தண்ணீர் மூழ்கி பாழாகிறது.

கடந்த ஆண்டு கரை உடைப்பால், விவசாயிகள் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்தனர். அடுத்த சில தினங்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் கரைகள் சீரமைக்கப்படவில்லை.தற்காலிகமாக மணல் மூட்டைகளால் போடப்பட்ட கரைகள் நிச்சயம், மழை நீரில் கரைந்துவிடும். ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், கடந்த ஆண்டைபோல், இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவது நிச்சயம். கான்கிரீட் சுவர் அமைய உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். அதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை. குறைந்தபட்சம் மழைக்கு முன் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பலப்படுத்திட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:வளைவு மற்றும் மண் அரிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு, கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பேடு குப்பத்திலும், 5.25 கோடி ரூபாயில் 100 மீட்டர் நீளம், 5 மீட்டர் உயரத்திற்கு கான்கிரிட் சுவர் அமைத்து கரைகள் பலப்படுத்தப்பட உள்ளன. அதற்கான டெண்டரும் வெளியாக உள்ளது.மழைக்கு முன், திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. பெரும்பேடு குப்பம் பகுதியில் ஆரணி ஆறு வளைந்து செல்கிறது. வெள்ளப்பெருக்கின்போது தண்ணீர் வேகமாக வந்த வளைவில் முட்டி மண் அரிப்பு உண்டாகி கரைகள் உடைகின்றன. இந்த ஆண்டு கரை உடைப்பிற்கு நிரந்தர தீர்வு கிடைத்து விடும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தற்காலிக கரை நிச்சயம் உடையும்



பெரும்பேடுகுப்பத்தில் உள்ள கரைகள் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு மழையின்போது அச்சத்துடன் இருக்கிறோம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் விவசாயம் செய்து வரும் நிலையில், அதுவும் தண்ணீர் மூழ்கி பாழாகிறது.கடந்த ஆண்டு கரை உடைப்பால், விவசாயிகள் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்தனர். அடுத்த சில தினங்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் கரைகள் சீரமைக்கப்படவில்லை.

தற்காலிகமாக மணல் மூட்டைகளால் போடப்பட்ட கரைகள் நிச்சயம், மழை நீரில் கரைந்துவிடும். ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், கடந்த ஆண்டைபோல், இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவது நிச்சயம். கான்கிரீட் சுவர் அமைய உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். அதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை. குறைந்தபட்சம் மழைக்கு முன் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பலப்படுத்திட வேண்டும்.- ஏ.எம்.சுகுமார் விவசாயி, ஆசானபூதுார்மேடு, பொன்னேரி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X