ஆட்டோ டிரைவர் கொலை; 3 பேர் கைது: கள்ளக்காதல் விவகாரமா என விசாரணை

Added : செப் 11, 2022 | |
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி, காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சக்திவேல்,26; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா, 22; இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.கடந்த 8ம் தேதி அங்குள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் இரவு சுவாமி ஊர்வலம் நடந்தது.
ஆட்டோ டிரைவர் கொலை; 3 பேர் கைது: கள்ளக்காதல் விவகாரமா என விசாரணை



பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி, காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சக்திவேல்,26; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா, 22; இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.கடந்த 8ம் தேதி அங்குள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் இரவு சுவாமி ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் வந்த உற்சவர் சுவாமியை எங்கள் பகுதியில் நிறுத்த வேண்டும் என, சக்திவேல் கூறினார். அதற்கு களத்துமேட்டு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் சுமன் மற்றும் குணா ஆகியோர் நிறுத்த முடியாது' என்றனர்.அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இத னால், இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு காந்தி நகரில் நின்றுகொண்டிருந்த சக்திவேலை சுமன், குணா, அஜித், மகேஷ், கொக்குப்பாளையம் பட்டிஸ்டா (எ) குணா, மணி ஆகியோர் ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.

அதன் பிறகு சக்திவேல் வீடு திரும்பவில்லை. நேற்று அதிகாலை 2 மணியளவில் காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு சக்திவேல் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இடது கைது துண்டிக்கப்பட்டு கிடந்தது.தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சக்திவேல் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்நிலையில், நேற்று காலை 7:30 மணியளவில் சக்திவேல் உறவினர்கள் மற்றும் வி.சி., நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொலை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பண்ருட்டி - உளுந்துார்பேட்டை சாலை, தட்டாஞ்சாவடியில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி.,கள் கோவிந்தராஜ், சீனுவாசலு, டி.எஸ்.பி., சபியுல்லா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன்பேரில் காலை 9:30 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால், பண்ருட்டி - உளுந்துார்பேட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. சாலை மறியலால் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.இது குறித்து சக்திவேலின் சகோதரர் சத்தியசீலன், 24, கொடுத்த புகாரின்பேரில் சுமன், குணா, அஜித், மகேஷ், கொக்குப்பாளையம் குணா, மணி ஆகிய 6 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, களத்துமேடு குமார் மகன் சுமன், 23; முருகன் மகன் குணா, 20; கொக்குப்பாளையம் கிருஷ்ணகுமார் மகன் வசந்த், 19; ஆகியோரை கைது செய்தனர்.

மற்ற மூவரை தேடி வருகின்றனர்.இப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கள்ளக்காதல் விவகாரத்தில் சக்திவேல் கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X