வாலிபர் மீது தாக்குதல் அ.தி.மு.க., நிர்வாகிக்கு வலை

Added : செப் 11, 2022 | |
Advertisement
வடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே இடப்பிரச்னையில் வாலிபரை தாக்கிய அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரை போலீ சார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த தையல்குணாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பாஷியம்; அ.தி.மு.க., குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர். இவருக்கும், அவரது உறவினர் வெங்கடேசன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்னையில் முன்விரதம் உள்ளது.நேற்று



வடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே இடப்பிரச்னையில் வாலிபரை தாக்கிய அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரை போலீ சார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த தையல்குணாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பாஷியம்; அ.தி.மு.க., குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர். இவருக்கும், அவரது உறவினர் வெங்கடேசன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்னையில் முன்விரதம் உள்ளது.நேற்று முன்தினம் வெங்கடேசனுக்கும், பாஷியத்திற்கும் தகராறு ஏற்பட்டது.

அவர்களை வெங்கடேசனின் உறவினர் வடலுார் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த சிவக்குமார், 32; சமாதானப்படுத்தினார்.ஆத்திரமடைந்த பாஷியம் உட்பட நான்கு பேர் சிவக்குமாரை தாக்கி, அவரின் மொபைல் போனை உடைத்தனர். இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாஷியம் உட்பட நால்வர் மீது, குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து, கோவிந்தராஜ் 45; நாராயணசாமி, 35, ஆகியோரை கைது செய்தனர். பாஷியம் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X