புதுச்சேரியில் மாயமான மூதாட்டி இரண்டரை மணி நேரத்தில் மீட்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
புதுச்சேரி ; புதுச்சேரியில் காணாமல்போன மூதாட்டியை இரண்டரை மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து மகளிடம் ஒப்படைத்தனர்.கேரளா மாநிலம், எர்ணாகுளம் திரிபுணித்ரா பகுதி வைக்கம் ரோட்டினை சேர்ந்தவர் ராஜிவ் வர்ரா,45. இவரது மனைவி தீப்தி,42.தம்பதி இருவரும் குடும்பத்துடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். நேரு வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கிய
புதுச்சேரியில் மாயமான மூதாட்டி இரண்டரை மணி நேரத்தில் மீட்பு



புதுச்சேரி ; புதுச்சேரியில் காணாமல்போன மூதாட்டியை இரண்டரை மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து மகளிடம் ஒப்படைத்தனர்.கேரளா மாநிலம், எர்ணாகுளம் திரிபுணித்ரா பகுதி வைக்கம் ரோட்டினை சேர்ந்தவர் ராஜிவ் வர்ரா,45. இவரது மனைவி தீப்தி,42.தம்பதி இருவரும் குடும்பத்துடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். நேரு வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கிய அவர்கள்,

நேற்று மாலை 3.௦௦ மணியளவில் ஓட்டலை காலி செய்ய முடிவு செய்தனர்.தீப்தி, தனது தாயார் சுஷானாவை,71, ஓட்டல் வாசலில் அமரச் செய்துவிட்டு, கணவருடன் அறையை காலி செய்ய உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது தாயாரை காணாமல் திடுக்கிட்டார்.அப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பெரியக்கடை போலீசில் தீப்தி புகார் கொடுத்தார்.இதற்கிடையே, ஒதியஞ்சாலை போலீசார் நேற்று மாலை 5.30 மணியளவில் ரோந்து சென்றபோது மூதாட்டி ஒருவர் கடற்கரையில் அமைதியாக அமர்ந்திருந்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.நேரு வீதியில் இருந்து வழி தெரியாமல் மகளை பிரிந்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பெரியக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் முருகன் முன்னிலையில், மகள் தீப்தியிடம், அவரது தாயாரை ஒப்படைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X