சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் சிக்கியது

Added : செப் 11, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய், வேளாண், பத்திரப் பதிவு, மின் வாரியம், வட்டார வளர்ச்சி உட்பட, ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் சேவைகள் பெற, பயனாளிகள் அதிகம் வருகின்றனர்.மாவட்ட அலுவலகங்களில், அரசு சேவைக்கு லஞ்சம் வாங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, செங்கல்பட்டு, திம்மாவரம் மஹாலட்சுமி நகரில் செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும்
சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் சிக்கியதுசெங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய், வேளாண், பத்திரப் பதிவு, மின் வாரியம், வட்டார வளர்ச்சி உட்பட, ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் சேவைகள் பெற, பயனாளிகள் அதிகம் வருகின்றனர்.மாவட்ட அலுவலகங்களில், அரசு சேவைக்கு லஞ்சம் வாங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, செங்கல்பட்டு, திம்மாவரம் மஹாலட்சுமி நகரில் செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகம் செயல்படுகிறது.

தவிர, அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக, பயனாளிகள் அளிக்கும் மனுக்கள் குறித்தும், விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கிறது.இந்நிலையில், மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், வீட்டு மனை, நிலம், பத்திரப் பதிவு மற்றும் திருமணம் பதிவு செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., இமானுவேல் ஞானசேகர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரியா, சப் - இன்ஸ்பெக்டர் சீதாபதி உள்ளிட்ட ஆறு போலீசார், நேற்று முன்தினம் மாலை மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இரவு 10:30 மணிக்கு, சோதனை நிறைவடைந்தது.அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 2.26 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் - பதிவாளார் சந்திரகுமார் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., இமானுவேல் ஞானசேகர் கூறியதாவது:மாவட்டத்தில் முதல் முறையாக, பத்திரப்பதிவு அலுவலகத்தில், சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதேபோல், மற்ற அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல் குறித்து புகார் அளிக்கலாம்.டி.எஸ்.பி., 94440 72827, இன்ஸ்பெக்டர் 94981 06163, அலுவலக தொலைபேசி எண் 044- - 2742 6055 ஆகிய எண்களில் தகவல் அளிக்கலாம். புகார் தருபவரின்விபரம் ரகசியமாக வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


திருமண பதிவுக்கு பணம் வசூல்

மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது.நீண்ட நாட்களாக காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுபமுகூர்த்த நாளான நேற்று முன்தினம் 23 திருமணங்கள் பதிவு செய்திருப்பதை அறிந்து, திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்து 2.26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா
11-செப்-202213:38:56 IST Report Abuse
T.SRINIVASAN திராவிட மாடல் என்றால் இது தான். எங்கும் ஊழல். எதிலும் ஊழல்
Rate this:
Cancel
11-செப்-202210:43:42 IST Report Abuse
இந்தியன் தமிழ் நாட்டில் அதிகமாக ஊழல் நடக்கும் சார் பதிவாளர் அலுவலகம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தான். அங்கு ஒரு தடவை ரெய்டு நடத்தினால் லட்சக்கணக்கான பணம் கிடைக்கும்.
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
11-செப்-202208:09:46 IST Report Abuse
நல்லவன் அவங்க அடிச்சதுல இவங்களுக்கு பங்கு வந்ததும் அவங்கள விட்டுடுவாங்க - இதுவரைக்கும் லஞ்சம் வாங்கின அரசு அதிகாரிகள் தண்டனை அனுபவித்ததாக தகவல் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X