புதுச்சேரி அரசு சட்டக் கல்லுாரியில் பொன்விழா ஆண்டு நிறைவு விழா

Added : செப் 11, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி கடந்த 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லுாரி யின், 50வது ஆண்டு பொன் விழா கொண்டா டட்டம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. பொன் விழா ஆண்டின் நிறைவு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.புதுச்சேரி நிதித் துறை செயலர் பிரசாந்த் கோயல் வரவேற்றார். சட்டக்கல்லுாரியின் பொன் விழா ஆண்டின்



புதுச்சேரி : புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி கடந்த 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லுாரி யின், 50வது ஆண்டு பொன் விழா கொண்டா டட்டம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. பொன் விழா ஆண்டின் நிறைவு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.புதுச்சேரி நிதித் துறை செயலர் பிரசாந்த் கோயல் வரவேற்றார். சட்டக்கல்லுாரியின் பொன் விழா ஆண்டின் நினைவு இதழை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் வெளியிட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், சுந்தரேஷ், புதுச்சேரி கவர்னர் தமிழிசை,, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, முதல்வர் ரங்கசாமி, ஐகோர்ட் நீதிபதி ராஜா, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர்.மேலும், சென்னை ஐகோர்ட் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களின் தற்போதைய நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் 50 பேர் பலர் கலந்து கொண்டனர்.கல்லுாரி முதல்வர் சீனீவாசன் நன்றி கூறினார்.விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வக்கீல்களின் பங்கு இன்றியமையாதது. நாடு முழுவதும் 18 லட்சம் வக்கீல்களில் 15 சதவீதம் மட்டுமே பெண் வக்கீல்கள் உள்ளனர். நீதிபதிகளிலும் பெண்கள் குறைவாகவே உள்ளனர்.இளம்பெண்கள் நீதித்துறையில் பணியாற்ற முன்வர வேண்டும். ஏனெனில் ஒரு சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்துத்தான் அளவீடு செய்ய முடியும் என அம்பேத்கர் தெரிவித்துள்ளார். எனவே, நீதித்துறையில் அதிகளவு பெண்கள் வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X