தாம்பரம் மாநகர தி.மு.க.,வில் ஆரம்பித்தது ‛'குஸ்தி'அமைச்சர்- - எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மோதல்

Added : செப் 11, 2022 | |
Advertisement
தாம்பரம் : தாம்பரத்தில், பேனரை அகற்றியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன்- மற்றும் எம்.எல்.ஏ., ராஜா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.தி.மு.க.,வில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகர செயலர், துணை செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல்,
தாம்பரம் மாநகர தி.மு.க.,வில் ஆரம்பித்தது ‛'குஸ்தி'அமைச்சர்- - எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மோதல்



தாம்பரம் : தாம்பரத்தில், பேனரை அகற்றியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன்- மற்றும் எம்.எல்.ஏ., ராஜா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.தி.மு.க.,வில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகர செயலர், துணை செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல், ஆக., 9ம் தேதி, பல்லாவரம்- துரைப்பாக்கம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

அப்போது, மாநகர செயலர் பதவிக்கு, அமைச்சர் அன்பரசனின் ஆதரவாளரான பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளரான தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.பதிவான 180 ஓட்டுகளில், 140 கருணாநிதிக்கும், 40 ராஜாவுக்கும் கிடைத்ததாக கூறப்பட்டது. அதனால், தாம்பரம் மாநகர தி.மு.க., செயலராக கருணாநிதி தேர்வாகியதாகவும், கட்சி தலைமையின் முறையான அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில், டி.ஆர்.பாலுவின் செல்வாக்கு மூலம், மாநகர் செயலர் பதவியை தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மற்ற பதவிகளுக்கு, அன்பரசனின் ஆதரவாளர்களே அறிவிக்கப்பட்டனர்.தேர்தலில் முடிவான பதவியை, ராஜா கைப்பற்றியது, அன்பரசனின் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.இதற்கிடையில், மாநகரசெயலராக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து, மாவட்ட அமைச்சரான அன்பரசனின் பெயர் இல்லாமல், ராஜா கோஷ்டியினர், போஸ்டர் ஒட்டினர்.இதனால், கோபமடைந்த அன்பரசன் ஆதரவாளர்கள், ராஜா பெயர் இல்லாமல் போஸ்டர்ஒட்டினர். இதன் காரணமாக, தாம்பரம் மாநகர தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், அன்பரசன் ஆதரவாளரும், மாநகர துணை செயலருமான சதாசிவம் என்பவர், சேலையூர்- அகரம்தென் சாலையில், சில நாட்களுக்கு முன் பேனர் வைத்தார். அந்த பேனரை யாரோ கழற்றி கீழே வைத்து உள்ளனர்.

இது தொடர்பாக, நேற்று காலை சதாசிவத்திற்கும், ராஜா கோஷ்டியை சேர்ந்த ராஜன் என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், தகராறு முற்றி, இரு கோஷ்டியினரும் மோதிக் கொண்டனர். மோதலில் காயம் அடைந்த சதாசிவம் உள்ளிட்ட மூன்று பேர், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதேபோல், ராஜன் உள்ளிட்ட மூன்று பேரும் காயமடைந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். தாம்பரம் தி.மு.க.,வில், மாநகர செயலர் பதவி அறிவிக்கப்பட்டு, சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், அதற்குள் கோஷ்டி மோதல் வெடித்து அடிதடி சண்டையாக மாறிஉள்ளது, தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X