நூலகம் பயன்பாட்டுக்கு வருமா?

Added : செப் 11, 2022 | |
Advertisement
திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள நுாலக கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது.இதனால் கட்டடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மாற்று கட்டடம் இல்லாததால், வாசகர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் புத்தகங்களை படிக்க முடியாமல் உள்ளனர். ஒன்றிய நிர்வாகம் விரைவில் கட்டடம் அமைக்க வேண்டும்.- ஏ.தமிழ்செல்வன், முத்துக்கொண்டாபுரம்.கோவிலில்
நூலகம் பயன்பாட்டுக்கு வருமா?



திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள நுாலக கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது.இதனால் கட்டடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மாற்று கட்டடம் இல்லாததால், வாசகர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் புத்தகங்களை படிக்க முடியாமல் உள்ளனர். ஒன்றிய நிர்வாகம் விரைவில் கட்டடம் அமைக்க வேண்டும்.- ஏ.தமிழ்செல்வன், முத்துக்கொண்டாபுரம்.கோவிலில் முட்புதர்கள்திருத்தணி, நந்தி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது கோட்ட ஆறுமுக சுவாமி கோவில். திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலாகும். இந்த கோவில் வளாகத்தில் விஜயராகவ பெருமாள் கோவில், விஜயலட்சுமி தாயார், ஆஞ்சநேயர், நாகலம்மன் மற்றும் பைரவர் ஆகிய கோவில்கள் உள்ளன.இக்கோவில்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காலை முதல், இரவு வரை வந்து தரிசனம் செய்வர்.இந்நிலையில், கோவில் வளாகம் முழுதும் அதிகளவில் முட்செடிகள் மற்றும் செடிகள் வளர்ந்துள்ளன. எனவே கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்.- கே.வெங்கடேசன், திருத்தணி.மின் கம்பத்தில் படர்ந்த கொடிதிருவள்ளூர் அடுத்த, கலியனுார், கொசஸ்தலை ஆற்றின் அருகில் விவசாய நிலத்திற்கு அருகில், உயர் அழுத்த மின் ஒயர் செல்வதற்காக, டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த டவர்களில், செடி, கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால், மழைக் காலத்தில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்குள், இந்த செடி, கொடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.சுரேஷ், திருவள்ளூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X