சந்தேக கணவரால் பெண் தற்கொலை| Dinamalar

சந்தேக கணவரால் பெண் தற்கொலை

Added : செப் 11, 2022 | |
பூந்தமல்லி : பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன், 37. மருத்துவ பிரதிநிதி. இவரது மனைவி கல்யாணசுந்தரி, 38.நேற்று முன்தினம் இரவு, கல்யாணசுந்தரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விசாரணையில், கல்யாணசுந்தரி, சுந்தரராமனை, மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம்



பூந்தமல்லி : பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன், 37. மருத்துவ பிரதிநிதி. இவரது மனைவி கல்யாணசுந்தரி, 38.நேற்று முன்தினம் இரவு, கல்யாணசுந்தரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விசாரணையில், கல்யாணசுந்தரி, சுந்தரராமனை, மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்தது தெரியவந்தது. மனைவி மீது சந்தேகம் கொண்ட சுந்தரராமன், அடிக்கடி தகராறு செய்து வந்ததும், நேற்று முன்தினம் இரவு, தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த கல்யாணசுந்தரி, தற்கொலை செய்ததும் தெரியவந்தது.இது குறித்து வழக்கு பதிந்த பூந்தமல்லி போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக சுந்தரராமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X