திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பூஜைக்கு டிக்கெட் நிறுத்தம்3 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு  

Added : செப் 11, 2022 | |
Advertisement
திருவாலங்காடு : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் மாந்தீஸ்வரர் பூஜைக்கு, பொருட்களை ஒப்பந்ததாரர் வழங்க மறுத்ததால், டிக்கெட் வினியோகம் நிறுத்தப்பட்டது. பின், பேச்சுக்கு பின், மூன்று மணி நேரம் கழித்து பூஜைக்கான டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில்,
திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பூஜைக்கு டிக்கெட் நிறுத்தம்3 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு  



திருவாலங்காடு : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் மாந்தீஸ்வரர் பூஜைக்கு, பொருட்களை ஒப்பந்ததாரர் வழங்க மறுத்ததால், டிக்கெட் வினியோகம் நிறுத்தப்பட்டது. பின், பேச்சுக்கு பின், மூன்று மணி நேரம் கழித்து பூஜைக்கான டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் உள்ளது.

இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பூஜை, காலை 6:00 மணி முதல், மதியம் 1:00 மணி நடக்கிறது.இதற்கு ஒரு குழுவுக்கு 150 பேர் என, மூன்று குழுக்களாக பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இந்த பூஜைக்கு 1,600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்றால், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழில் வளர்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை.எனவே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் வாரந்தோறும், 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜையில் பங்கேற்று வருகின்றனர்.இந்த பூஜைக்கு தேவையான தேங்காய், பூ, வெற்றிலை பாக்கு, இளநீர், பூமாலை, பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை வழங்க திருவாலங்காடில் செயல்படும் சீனிவாச டிரேடர்சுக்கு, திருத்தணி கோவில் நிர்வாகம் 'டெண்டர்' விட்டுள்ளது.இந்நிலையில், அந்த நிறுவனத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல், கடந்த மாதம் வரை பூஜை பொருட்களை கொள்முதல் செய்ததற்கான பணம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 489 ரூபாயை, கோவில் நிர்வாகம் நிலுவையில் வைத்து உள்ளது.எனவே, நேற்று பூஜைக்கு அந்நிறுவனம் பூஜை பொருட்களை வழங்குவதை நிறுத்தியது. இதனால் பூஜை பொருட்கள் இல்லாமல், டிக்கெட் வினியோகமும் நிறுத்தப்பட்டது.பூஜைக்காக, காலை 5.30 மணி முதல், கோவில் வளாகத்தில் காத்திருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரக்தியடைந்தனர்.கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோவில் அலுவலக அதிகாரியிடம், அவர்கள் கேள்வி எழுப்பினர்.இதையடுத்து, ஒப்பந்ததாரரிடம் பேச்சு நடத்திய அதிகாரிகள், வரும் திங்கள் கிழமைக்குள் நிலுவை தொகை வழங்குவதாக உறுதியளித்தனர்.இதைத் தொடர்ந்து , மூன்று மணி நேரத்திற்கு பின் பூஜைக்கான டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X