ஆற்றில் சிக்கிய சகோதரர்கள்: மணலுார்பேட்டையில் மீட்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார், : மணலுார்பேட்டை தென்பெண்ணையாற்றில், குளித்த போது அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் இருவரை போலீசார் மீட்டனர்.திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம் மகன்கள் ரவி, 42; வினோத், 32; இருவரும் குடும்பத்துடன் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று ஊருக்கு திரும்பினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை



திருக்கோவிலுார், : மணலுார்பேட்டை தென்பெண்ணையாற்றில், குளித்த போது அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் இருவரை போலீசார் மீட்டனர்.திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம் மகன்கள் ரவி, 42; வினோத், 32; இருவரும் குடும்பத்துடன் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று ஊருக்கு திரும்பினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வருவதைப் பார்த்து மாலை 5:30 மணியளவில் தரைப் பாலத்தில் 10 பேர் குடும்பத்துடன் குளித்தனர்.அப்போது, திடீரென வினோத், ரவி இருவரும் 300 மீட்டர் துாரத்திற்கு நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைப் பார்த்த அவர்களது குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.இதற்கிடையே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும், ஆற்றின் நடுவே இருந்த கூட்டுக் குடிநீர் திட்ட கிணற்றின் சிமென்ட் கட்டையை பிடித்து கொண்டு கிணற்றின் மீது ஏறி நின்றனர்.மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், தனிப்பிரிவு தலைமை காவலர் ராமச்சந்திரன், போலீஸ்காரர் ராமலிங்கம் பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம், காற்று நிரப்பிய டியூப் மூலம் ஆற்றுக்குள் நீந்திச் சென்று இருவரையும் பத்திரமாக மீட்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X