மொபட் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்ணெதிரில் மனைவி பலி

Added : செப் 11, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருபுவனை : திருபுவனை அருகே, மொபட் மீது லாரி மோதிய விபத்தில், கணவன் கண் எதிரே மனைவி உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் தும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன், 45; கட்டடத் தொழிலாளி. இவர் நேற்று காலை 8.30 மணியளவில், மனைவி சுந்தரவள்ளி, 38; மற்றும் 3 வயது மகளுடன், மதகடிப்பட்டு வழியாக, டி.வி.எஸ். எக்ஸ்எல். மொபட்டில்



திருபுவனை : திருபுவனை அருகே, மொபட் மீது லாரி மோதிய விபத்தில், கணவன் கண் எதிரே மனைவி உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் தும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன், 45; கட்டடத் தொழிலாளி. இவர் நேற்று காலை 8.30 மணியளவில், மனைவி சுந்தரவள்ளி, 38; மற்றும் 3 வயது மகளுடன், மதகடிப்பட்டு வழியாக, டி.வி.எஸ். எக்ஸ்எல். மொபட்டில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.திருபுவனை இந்திரா நகர் அருகே சென்றபோது, கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சுந்தரவள்ளி மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.கணவன் மற்றும் 3 வயது மகள் கண் எதிரே பெண் பலியானதை கண்ட அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்தனர்.பலியான குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருபுவனை போலீசார் மற்றும் வில்லியனுார் போக்குவரத்து போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று, பொது மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
11-செப்-202209:17:43 IST Report Abuse
chennai sivakumar Mofusal areavil சும்மா பறக்கிறாங்க ஓட்டுனர்கள். ஒண்ணும் பண்ணவே முடியாது. முயற்சிக்கவும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X