பள்ளி கட்டடம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
காட்டுமன்னார்கோவில் : கொள்ளிடக்கரை கிராமமான மேலப்பருத்திக்குடியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டித் தர வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ளது மேலப்பருத்திக்குடி கிராமம். கொள்ளிடம் ஆற்றில் கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள்
பள்ளி கட்டடம் இல்லாமல்  மாணவர்கள் தவிப்பு



காட்டுமன்னார்கோவில் : கொள்ளிடக்கரை கிராமமான மேலப்பருத்திக்குடியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டித் தர வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ளது மேலப்பருத்திக்குடி கிராமம். கொள்ளிடம் ஆற்றில் கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இப்பள்ளியின் வகுப்பறை கட்டடம் பழுதடைந்ததால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.பள்ளி அதே பகுதியில் உள்ள சிறிய வாடகை வீட்டில் இயங்கி வருகிறது. அங்கு இடவசதி போதுமானதாக இல்லை.கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அவதியடைகின்றனர்.எனவே, மேலப்பருத்திக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு நிதி ஒதுக்கி புதிய வகுப்பறை கட்டித்தர வேண்டும் என, ஊராட்சி தலைவர் மல்லிகா மற்றும் பெற்றோர்கள், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X