கொள்ளிடத்தில் கரைபுரளும் வெள்ளம்தொடரும் கிராம மக்கள் பாதிப்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
சிதம்பரம் : கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சிதம்பரம் அருகே தீவு கிராம மக்களின் பாதிப்பு தொடர்கிறது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக, மேட்டூர் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால், கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த வாரம் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.தொடர்ந்து படிப்படியாக அதிகரித்தது. அதிக பட்சமாக 2 லட்சம் கன அடி
கொள்ளிடத்தில் கரைபுரளும் வெள்ளம்தொடரும் கிராம மக்கள் பாதிப்பு



சிதம்பரம் : கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சிதம்பரம் அருகே தீவு கிராம மக்களின் பாதிப்பு தொடர்கிறது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக, மேட்டூர் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால், கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த வாரம் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.தொடர்ந்து படிப்படியாக அதிகரித்தது.

அதிக பட்சமாக 2 லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரை கிராமங்களான ஜெயங்கொண்டபட்டிணம், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர், அம்பிகாபுரம், மடத்தான்தோப்பு, தீத்துக்குடி, குருவாடி, வீரன்கோவில் திட்டு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி 1.30 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது.இதனால், சிதம்பரம் அருகே தீவு கிராம மக்கள் பாதிப்பு தொடர்ந்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X