கடலூரில் சிக்னல் கம்பம் முறிந்து கார் மீது விழுந்ததால் பரபரப்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுாரில் சிக்னல் கம்பம் முறிந்து, கார் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார், திருப்பாதிரிபுலியூர் அண்ணா பாலம் அருகே, ஜவான் பவன் சாலை சந்திப்பு பகுதியில், சிக்னல் கம்பம் (பிளிங்க் லைட்) உள்ளது. இரும்பிலான இந்த கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டிருந்தது.கம்பத்தின் அடிப்பகுதி இரும்பு முழுமையாக துருப்பிடித்து செரித்ததால், நேற்று பகல் 12:00
கடலூரில் சிக்னல் கம்பம் முறிந்து  கார் மீது விழுந்ததால் பரபரப்பு



கடலுார் : கடலுாரில் சிக்னல் கம்பம் முறிந்து, கார் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார், திருப்பாதிரிபுலியூர் அண்ணா பாலம் அருகே, ஜவான் பவன் சாலை சந்திப்பு பகுதியில், சிக்னல் கம்பம் (பிளிங்க் லைட்) உள்ளது. இரும்பிலான இந்த கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டிருந்தது.கம்பத்தின் அடிப்பகுதி இரும்பு முழுமையாக துருப்பிடித்து செரித்ததால், நேற்று பகல் 12:00 மணியளவில் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது.

அப்போது, கோண்டூரைச்சேர்ந்த முத்துவேல் என்பவர் ஓட்டி வந்த காரின் முன்பகுதியில் கம்பம் விழுந்ததால், அதிர்ச்சி அடைந்த அவர், உடனே காரை நிறுத்தினார்.அந்த இடம் வாகன போக்குவரத்துக்கு முக்கிய சந்திப்பு என்பதால்,போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அண்ணா பாலம் சிக்னலில் பணியில் இருந்த போலீசார்விரைந்துபோக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த சிக்னல் கம்பம் காரின் முன் பகுதியில் விழுந்ததால் முத்துவேல் மற்றும் அவருடன் வந்த பெண் ஒருவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதேபோன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடலுார் அண்ணா பாலம் அருகே புதுப்பாளையம் செல்லும் சந்திப்பில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் மழையால் சாய்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.நகரில் உள்ள அனைத்து சிக்னல் கம்பங்களின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X