சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Added : செப் 11, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிரிகரித்து பலரும் அவற்றால் பாதிகப்பட்டு வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் பிரிவு இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட
சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு



கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிரிகரித்து பலரும் அவற்றால் பாதிகப்பட்டு வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் பிரிவு இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் ஜோதிவெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி பேசுகையில், 'சைபர் குற்றங்களின் பாதிப்புகளுக்கு ஆளாகாத வகையில் மொபைல் போன் மற்றும் இணையதளப் பயன்பாடுகளை கவனமுடன் கையாள வேண்டும்' என, அறிவுறுத்தினார்.

சைபர் கிரைம் பிரிவு இஸ்பெக்டர் கவிதா பேசுகையில், 'மாணவர்கள் அனைத்து இணையப் பயன்பாடுகளிலும் உரிய பாதுகாப்பு அம்சங்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால், உடனடியாக போலீஸ் உதவி எண் 1930 ஐ தொடர்புகொள்ள வேண்டும்' என்றார்.சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் மற்றும் போலீசார் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர், போதை பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்அருள்தாஸ் நன்றி கூறினார்.பேராசிரியைகள் பெரியநாயகி, மித்ரா, பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X