கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்; ராமநாதபுரத்திற்கு பயன்; உயர்நீதிமன்றம் கருத்து

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் தண்ணீர் பஞ்சம், வறட்சி நிலவுகிறது. கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் ஆலையை நிறுவினால், கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஆலை அமைக்க நிலத்தை கையகப்படுத்தி குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.தென்னை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்த ராமநாதபுரம் மாவட்டம்
கடல் நீர்,  குடிநீர், உயர்நீதிமன்றம், ராமநாதபுரம்,


மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் தண்ணீர் பஞ்சம், வறட்சி நிலவுகிறது. கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் ஆலையை நிறுவினால், கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஆலை அமைக்க நிலத்தை கையகப்படுத்தி குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தென்னை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே குதிரைமொழியில் 85 பேருக்கு 1972 ல் வேளாண் துறை நிலம் ஒப்படைவு செய்தது. தென்னை சாகுபடியில் ஈடுபட வேண்டும்; வேறு பயிரை பயிரிடக்கூடாது நிபந்தனையுடன் தலா 4.75 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இதிலிருந்து வெளியேற்ற தடை விதித்து, பட்டா வழங்க உத்தரவிடக்கோரி சிலர் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: முறையான விசாரணை நடத்தவில்லை. நிலத்தில் பனைமரங்கள் உள்ளன. நிபந்தனைகளை மீறியதாக கூறுவது ஏற்புடையதல்ல என தெரிவித்தது.


latest tamil news



அரசு தரப்பு: பயனாளிகள் 3 ஏக்கரில் தென்னை மரங்கள், மீதமுள்ள இடத்தில் தானியங்கள் பயிரிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிலம் வழங்கப்பட்டது. மனுதாரர்கள் தென்னை சாகுபடியில் ஈடுபடவில்லை. நிபந்தனையை மீறியதால், விளக்கமளிக்க வாய்ப்பளித்து நிலம் ஒப்படைவு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. விதிமீறல் இல்லை.கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலை அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்திடம் நிலத்தை ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இம்மனு ஏற்புடையதல்ல என தெரிவித்தது.நீதிபதி: அரசு தரப்பின் நிலைப்பாடு ஏற்புடையதே. தென்னை சாகுபடியில் ஈடுபட வேண்டும் நிபந்தனையுடன் நிலம் வழங்கப்பட்டது. பயனாளிகளோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளோ நிலத்தை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள முடியாது. பட்டா வழங்குமாறு கோர மனுதாரர்களுக்கு உரிமை இல்லை.ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மாவட்டத்தில் எப்போதும் வறட்சி நிலவுகிறது. கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை நிறுவினால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து, கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

அதற்கு 40 ஏக்கர் நிலம் தேவைப்படலாம். மனுதாரர்களில் சிலர் நிலத்தை பகுதியாக இழக்க நேரிடும். தற்போது நிலத்தில் மரங்கள் உள்ளன. இவை அரசுத் துறையால் வளர்க்கப்படவில்லை. இந்நபர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைப்பதால் பாதிக்கப்படுவதாக கருதும் நபர்கள், ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளிக்கலாம். அதை சட்டத்திற்குட்பட்டு தகுதி அடிப்படையில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

40 ஏக்கர் நிலத்தை உடனடியாக கையகப்படுத்தி குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியேற முறையான நோட்டீஸ் அளிக்க வேண்டும். அவர்கள் மாற்று ஏற்பாடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்.ஆலை அமைக்க நிலம் கையகப்படுத்த தேவைப்படாத மற்ற மனுதாரர்களை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். அது பைசல் செய்யப்படும்வரை வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
12-செப்-202200:35:03 IST Report Abuse
Neutral Umpire மக்கள் தொகையை குறைக்கலாம் ..கொஞ்சம் மக்கள் ராமநாதபுரத்தை விட்டு வெளியேறி வேறு இடத்துக்கு செல்லலாம் ..
Rate this:
Cancel
11-செப்-202217:21:19 IST Report Abuse
ஆரூர் ரங் கடற்கரையை ஒட்டி வாழும் உயிரினங்கள், தாவரங்களுக்கு😌 இத்திட்டம் ஆபத்தானது. கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பகுதியில் உள்ள உப்பின் அளவைக் கூட்டி அவற்றை உயிர் வாழ விடாமல் தடுக்கும் . பல சுற்றுச்சூழல் அறிஞர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-செப்-202214:10:36 IST Report Abuse
Sampath Kumar இதை தான் நாங்க வருசா வருஷம் சொல்லிக்கிட்டு கிடக்கோம் ஒருத்தரும் கேக்க மாட்டேங்கற யுவர் ஹனோர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X