டிஜிட்டல் விற்பனையில் அசத்தும் மதுரை பெண்

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | |
Advertisement
சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் நினைக்காமல் வாழ்க்கையில் முன்னேற அதில் என்ன வழி என்று யோசித்து முன்னேறும் பெண்கள் ஏராளம். குடும்ப தலைவி ஆகிவிட்டோம், இனி எதற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணாமல் தன்னால் முடிந்த வேலையை செய்து குடும்பத்திற்கு துாணாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர் பெண்கள்.சமூக வலைத்தளங்களை பாலமாக கொண்டு டிரேடிங் தொழிலை
டிஜிட்டல், விற்பனை, மதுரை, டிஜிட்டல்_விற்பனை

சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் நினைக்காமல் வாழ்க்கையில் முன்னேற அதில் என்ன வழி என்று யோசித்து முன்னேறும் பெண்கள் ஏராளம். குடும்ப தலைவி ஆகிவிட்டோம், இனி எதற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணாமல் தன்னால் முடிந்த வேலையை செய்து குடும்பத்திற்கு துாணாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர் பெண்கள்.

சமூக வலைத்தளங்களை பாலமாக கொண்டு டிரேடிங் தொழிலை ஆரம்பித்தார் மதுரையை சேர்ந்த ராஜி. ஆன்லைனில் சாரீஸ், பேக்கரி பொருட்களை விற்க ஆரம்பித்து இப்போது செயற்கை நகைகளை மகி ட்ரென்ட்ஸ் என்ற பெயரில் விற்கிறார். மொத்த விற்பனையாளராக வளர்ச்சி அடைந்துள்ளார்.ராஜி கூறியதாவது: விதவிதமாய் வித்தியாசமாய் அழகழகாய் அற்புதமாய் என்ற வரிகளுக்கு ஏற்ப மாடல் யுகத்தில் தங்கநகை போன்றே பிரதிபலிக்கும் செயற்கை நகைகளை அணிகின்றனர் என் போன்ற பெண்கள். சேலைக்கு மேட்சிங்கா பெரிய தோடு, ஜோக்கர் மாடர்ன் நகைகள் அணிய பிடிக்கும். மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி தரமானதா கொடுக்கணும் என்பது என்னோட ஆசை.


latest tamil news


ஆன்டிக், கோல்டு,மேட் பினிஷ், ஸ்டோன்ஸ் கம்மல், ஜிமிக்கி, ஆரம், செயின்ஸ், கிரிஸ்டல் பீட்ஸ் என எல்லா வகை நகையும் இருக்கிறது. லட்சுமி, முருகர் வள்ளி தெய்வயானை, கிருஷ்ணர் ஆரங்களை ஆர்வமா வாங்கிறாங்க. இந்தியா முழுக்க இலவசமாக டெலிவரி செய்கிறேன். வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வீடியோ கால் மூலமா எந்த மாடல் வேண்டும் என்று தேர்வு செய்யலாம் என்றார்.


latest tamil news



நகைகளை பராமரிக்கும் முறை குறித்து ராஜி கூறியதாவது: முழுமையாக ரெடியான பிறகு கடைசியாக தான் நகைகளை அணிய வேண்டும். நகைகள் மேல் வாசனை திரவியங்கள் படக்கூடாது. கழற்றி உடனே பாக்ஸ் உள்ளே வைக்க கூடாது. ஒரு காட்டன் துணி மேல் வைத்து 10 நிமிடம் கழித்து தான் கவர் உள்ளே வைக்க வேண்டும். அப்போது நிறம் மங்காமல் இருக்கும் என்றார்.
தொடர்புக்கு 99447 83083

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X