ஈரோட்டில் போலி மதுபான ஆலை தலைமறைவான இருவரை பிடிக்க தனிப்படை

Added : செப் 11, 2022 | |
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் போலி மதுபான விற்பனை சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதுகுளத்தூரை சேர்ந்த அண்ணாச்சி (எ) வீரபாண்டி யன், 51, என்பவரை மதுவிலக்கு போலீசார் தேடி வந்தனர்.அவரது மொபைல்போன் எண்ணை வைத்து தேடி வந்த போது மொபைல்


ஈரோடு: ஈரோட்டில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் போலி மதுபான விற்பனை சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதுகுளத்தூரை சேர்ந்த அண்ணாச்சி (எ) வீரபாண்டி யன், 51, என்பவரை மது
விலக்கு போலீசார் தேடி வந்தனர்.
அவரது மொபைல்போன் எண்ணை வைத்து தேடி வந்த போது மொபைல் போன் சிக்னல், ஈரோடு வீரப்பன்சத்திரம் சூளை பகுதியில் இருப்பது தெரிய வந்தது. ஈரோடு மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஈரோடு போலீசார் கடந்த, 9ம் தேதி ஈரோடு சூளையில் உள்ள ஒரு கட்டடத்தில் அவரை பிடித்தனர். அக்கட்டடத்தில் சிறிய அளவிலான போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்ததும்
கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்த வீரபாண்டியன், 51; முதுகுளத்தூரை சேர்ந்த மாலைராஜ், 34; அசோக்குமார்,35; சித்திரை வேல், 35; ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பிடிபட்ட 4 பேரும் கடந்த 20 நாட்களுக்கு முன் ஈரோடு வந்து பழைய பாட்டில்களை சேகரிக்கும் வியாபாரம் செய்வது நடித்து போலி மதுபான ஆலை நடத்தி வந்தது தெரியவந்தது.
அங்கிருந்த ஸ்பிரிட், போலி மதுபான பாட்டில்கள், லேபிள்கள், வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களாக கருதப்படும் கடலுாரை சேர்ந்த முருகேஷ், சீர்காழி ஆகிய இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X