காவிரி, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
கரூர்: வடகிழக்குப் பருவமழை பெய்ய துவங்கியுள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வரும் சாயக்கழிவை கட்டுப்படுத்தவும், மக்களை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.நொய்யல் ஆறு, கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் உருவாகி, திருப்பூர் மாவட்டம், வழியாக கரூர் மாவட்டம், நொய்யல்


கரூர்: வடகிழக்குப் பருவமழை பெய்ய துவங்கியுள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வரும் சாயக்கழிவை கட்டுப்படுத்தவும், மக்களை காக்கவும் நட
வடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நொய்யல் ஆறு, கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் உருவாகி, திருப்பூர் மாவட்டம், வழியாக கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் காவிரியாற்றில் கலக்கிறது. நொய்யல் ஆறு மூலம் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 75 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெருகிய சாயப்பட்டறைகளால், நொய்யல் ஆறு பாதிக்கப்பட்டது. ஆற்றில் சாயக்கழிவு கலந்து விவசாய நிலங்களில், சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில், நொய்யல், அஞ்சூர், துக்காச்சி, தென்னிலை, முன்னுார், அத்திப்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டது.
சாயக்கழிவை கட்டுப்படுத்தக்கோரி, பல்வேறு விவசாய சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையை, பல சாயப்பட்டறைகள் பின்பற்றாததால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தொடர்ந்து
வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, கரூர் மாவட்ட பாசன விவசாயிகள் கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து நொய்யல் ஆற்றில் வரும் சாயக்கழிவு, கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் கலக்கிறது. இதனால், டெல்டா மாவட்டம் மட்டுமின்றி, வீராணம் ஏரி மூலம் காவிரி தண்ணீரை பயன்படுத்தும், சென்னை மாநகராட்சி
பொதுமக்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும்.
இதனால், சாயக்கழிவு விஷயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். சாயக்கழிவு பாதிப்பில் இருந்து நொய்யல், காவிரியாற்றை பாதுகாக்க வேண்டும்.
மேலும், மேட்டூர் அணை, பவானி சாகர் அணை மற்றும் அமராவதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வட
கிழக்குப் பருவ மழையும், திருப்திகரமாக துவங்கியுள்ளது. இதனால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தண்ணீர் கலந்து, கரூர் மாவட்டத்துக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நொய்யல் ஆறு மூலம், காவிரியாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். இல்லையென்றால், கரூர் மாவட்டத்தில், தண்ணீர் இருந்தும் விவசாயம் பொய்த்துவிடும். பொதுமக்களுக்கும் உடல்நலக் கேடு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X