'ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் விரைவில் ரோப்கார் வசதி'

Added : செப் 11, 2022 | |
Advertisement
''விரைவில் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் வசதி பயன்பாட்டுக்கு வரும்,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.குளித்தலையில், தி.மு.க., சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடந்தது. மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசியதாவது: குளித்தலை பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மருதுார் - முசிறி காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை

''விரைவில் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் வசதி பயன்பாட்டுக்கு வரும்,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
குளித்தலையில், தி.மு.க., சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடந்தது. மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசியதாவது: குளித்தலை பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மருதுார் - முசிறி
காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு, 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் குளித்தலை தொகுதிக்கு அரசு கலைக் கல்லுாரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், ஆர்.டி.ஓ., அலுவலக கட்டடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் வசதி பயன்பாட்டுக்கு வரும். குளித்தலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கப்படும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் பேராசிரியர் ஜெயரஞ்சன், வக்கீல் ராஜீவ்காந்தி ஆகியோர் பேசினர். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் சக்திவேல், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X