கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் அமைப்புகள்

Added : செப் 11, 2022 | |
Advertisement
'கிராம பகுதிகளில் கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபடும் கிறிஸ்தவ அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., கடவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வடிவேல், சிந்தாமணி போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்துள்ளார்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், கடவூர் அருகே, தேவர்மலை, களத்துப்பட்டி மேலப்பகுதி, விராலிப்பட்டி, வீரணம்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக இயேசு


'கிராம பகுதிகளில் கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபடும் கிறிஸ்தவ அமைப்பு
கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., கடவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வடிவேல், சிந்தாமணி போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்துள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், கடவூர் அருகே, தேவர்மலை, களத்துப்பட்டி மேலப்பகுதி, விராலிப்
பட்டி, வீரணம்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக இயேசு கிறிஸ்து அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கி
யுள்ளனர். அங்குள்ள ஹிந்துக்களை, கிறிஸ்தவ மதத்திற்கு மாறசொல்லி துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர். ஹிந்துக்களை கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கிறிஸ்தவ அமைப்புகள் இப்பகுதியில் முகாமிட்டு, மதம் மாற்றுவதற்குண்டான வேலைகளை செய்து வருகின்றனர்.
இவர்களால் இப்பகுதி
யில் மத நல்லிணக்கத்துக்கு தீங்கு ஏற்பட்டு, தேவையில்லாத மோதல் உருவாகும் நிலை உள்ளது. எனவே கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபடும் கிறிஸ்தவ அமைப்பு
கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X