குளித்தலை தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
குளித்தலை,:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குளித்தலை சட்ட சபை தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்திற்கு சென்றார்.முற்றிலும் விவசாயம் சார்ந்த தொகுதியான குளித்தலையில் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்குரிய பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மருதுார் காவிரி


குளித்தலை,:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குளித்தலை சட்ட சபை தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்திற்கு சென்றார்.

முற்றிலும் விவசாயம் சார்ந்த தொகுதியான குளித்தலையில் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்குரிய பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மருதுார் காவிரி ஆற்றின் குறுக்கே, 750 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை கட்டுதல், மேட்டுமருதுாரில் வடிகால் வாய்க்காலில் 1 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டுதல், குளித்தலையில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுதல், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியில் இருந்து உபரி நீரை கொண்டு வருதல், குளித்தலை - மணப்பாறை நெடுஞ்
சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுதல் போன்ற வாக்குறுதிகளை அரசியல் கட்சியினர் ஒவ்வொரு தேர்தலின்போதும் அளிக்கின்றனர். ஆனால் அவை எதுவும் நிறைவேற்றப்படுவது கிடையாது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரசு தலைமை மருத்துவமனை, கரூர் மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக செல்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பெயர் பலகை கூட வைக்கப்படவில்லை. பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
குளித்தலை கல்வி மாவட்டத்தில், 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது அறிவிக்கப்பட்ட நல்லாசிரியர் விருதுக்கு இந்த தொகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
கரூரில் போதிய இடமில்லாமல் செயல்படும் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை இனுங்கூர் மாநில விதைப் பண்ணையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், ‍தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பொதுமக்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என கவலை ‍ தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X