டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் சாலை மறியல்

Added : செப் 11, 2022 | |
Advertisement
கரூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு எழுத வந்தவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேற்று மாநிலம் முழுவதும் அரசுப் பணிக்கான தேர்வு நடந்தது. கரூர் மாவட்டத்தில், 5 மையங்களில் 2,549 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கரூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 240 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள்


கரூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு எழுத வந்தவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேற்று மாநிலம் முழுவதும் அரசுப் பணிக்கான தேர்வு நடந்தது. கரூர் மாவட்டத்தில், 5 மையங்களில் 2,549 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கரூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 240 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை 9:00 மணிக்கு மேல் தாமதமாக வந்ததாக கூறி, 10க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அதிர்ச்சி
யடை ந்த தேர்வர்கள், கரூர் - வாங்கல் சாலையில் காலை, 9:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் உள்ளிட்ட போலீ சார் அங்கு வந்து, சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டால் கைது செய்ய நேரிடும் என போராட்டக்காரர்களை எச்சரித்தனர்.
இதனால், அவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அங்கு சிறிது ‍நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X