ரேஷன் கடைகளில் காலியிடம்: பொதுமக்கள் கடும் அவதி

Added : செப் 11, 2022 | |
Advertisement
நாமகிரிப்பேட்டை யூனியன் ரேஷன் கடைகளில், 15 சதவீதம் விற்பனையாளர் பணியிடம் காலியாக இருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். நாமகிரிப்பேட்டை யூனியனில், 69 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 15 சதவீதம் கடைகளில், அதாவது, 9 கடைகளில் விற்பனையாளர் இடம் காலியாக உள்ளது. இதனால், மீதம் உள்ள, 60 கடைகளில் உள்ள விற்பனையாளர்கள், ஒருநாள் விட்டு, மறுநாள் காலியாக உள்ள கடைகளுக்கு செல்கின்றனர்.


நாமகிரிப்பேட்டை யூனியன் ரேஷன் கடைகளில், 15 சதவீதம் விற்பனையாளர் பணியிடம் காலியாக இருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். நாமகிரிப்பேட்டை யூனியனில், 69 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 15 சதவீதம் கடைகளில், அதாவது, 9 கடைகளில் விற்பனையாளர் இடம் காலியாக உள்ளது. இதனால், மீதம் உள்ள, 60 கடைகளில் உள்ள விற்பனையாளர்கள், ஒருநாள் விட்டு, மறுநாள் காலியாக உள்ள கடைகளுக்கு செல்கின்றனர். அதுமட்டுமின்றி, விடுமுறை எடுக்கும் விற்பனையாளர் இடத்தையும் கவனிக்க வேண்டியிருப்பதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
திடீரென மற்ற கடைகளுக்கு விற்பனையாளர்கள் செல்வதால், அவர்களுடைய கடைகளை மூடி விடுகின்றனர். இதனால், பொருட்களை வாங்க விடுமுறை எடுத்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, காலியாக உள்ள கடைகளில் உடனடியாக விற்பனையாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X