அரிசி ஏற்றுமதிக்கு வரி விவசாயிகள் கண்டனம்

Added : செப் 11, 2022 | |
Advertisement
ஈரோடு,: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் செயலாளர் நல்லசாமி தலைமையில் நடந்தது. தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் அரிசிக்கு, 20 சதவீதம் வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இச்செயல் விவசாய விரோத போக்காகும். இதற்கு

ஈரோடு,: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் செயலாளர் நல்லசாமி தலைமையில் நடந்தது. தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் அரிசிக்கு, 20 சதவீதம் வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இச்செயல் விவசாய விரோத போக்காகும். இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
ஏற்கனவே விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காத நிலையில், ஏற்றுமதியாகும் அரிசிக்கான, 20 சதவீத வரி விதிப்பு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். விவசாயிகளின் தற்போதைய நிலைகளை மத்திய அரசு புரிந்து கொண்டு, ஏற்றுமதிக்கான வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X