சீர்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?| Dinamalar

சீர்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

Added : செப் 11, 2022 | |
மயிலாடுதுறை: சீர்காழியில் தடையில்லா போக்குவரத்திற்கு ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி- பணங்காட்டாங்குடி சாலையில் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் கோவில்பத்து, பணமங்கலம், அகனி, தென்னங்குடி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, புங்கனூர், ஆதமங்கலம்,

மயிலாடுதுறை: சீர்காழியில் தடையில்லா போக்குவரத்திற்கு ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி- பணங்காட்டாங்குடி சாலையில் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் கோவில்பத்து, பணமங்கலம், அகனி, தென்னங்குடி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், அகர எலத்தூர், பணங்காட்டாகுடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மட்டுமின்றி சீர்காழி நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.


இந்நிலையில் இந்த ரயில்வே கேட் 30 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் வந்து செல்வதால் அடிக்கடி ரயில்வேகேட் மூடப்படுகிறது. இதன் காரணமாக ஆபத்து நேரங்களில் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலைய வாகனம் உள்ளிட்ட முக்கிய வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் ரயில் கேட்டு திறந்த பின்பு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் நிலையும் இருந்து வருகிறது.


மேலும் ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்படும் போது இருபுறங்களிலும் அத்தியாவசிய பணிகளுக்கு மக்கள் செல்லக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் ரயில்வே கேட் திறக்கும் பொழுது வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்லும் பொழுது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு பணங்காட்டாங்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஆனால் எந்தவித பயனும் இல்லை இனி வரும் காலங்கள் இல்லாது போக்குவரத்திற்கு தடை இன்றி ரயில்வே மேம்பாலம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X