தொழில்நுட்ப வல்லரசு நாடாக 2047ல் இந்தியா மாறும்: நிர்மலா

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை : ''வரும் 2047ல் தொழில்நுட்ப வல்லரசு நாடாக இந்தியா மாறும். இதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.சென்னை, வண்டலுார் அருகே மேலகோட்டையூரில் இருக்கும் ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., எனப்படும் இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின், 10வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தகவல்
 தொழில்நுட்ப வல்லரசு நாடாக 2047ல்  இந்தியா மாறும்: நிர்மலா


சென்னை : ''வரும் 2047ல் தொழில்நுட்ப வல்லரசு நாடாக இந்தியா மாறும். இதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை, வண்டலுார் அருகே மேலகோட்டையூரில் இருக்கும் ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., எனப்படும் இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின், 10வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு பட்டமளித்து, நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.

ஆறு பேருக்கு பிஎச்.டி., பட்டம்; 53 பேருக்கு எம்.டெக்., பட்டம் உட்பட 380 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. ஹரிஷ், வெங்கடரமணன், முத்தையா, வினீத் செங்கார், ஸ்ரீகிரேன், சக்தி, பிரவர்த்தனா ஆகியோர் தங்க பதக்கங்கள் பெற்றனர். நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் வடிவமைப்பு ஆராய்ச்சியில் மெய் நிகர் தொழில்நுட்பம், தரவு அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் திறன்மிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது.

இந்த ஆண்டில் 97 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவற்றில், பெரும்பாலானோர் உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் அடுத்த 25 ஆண்டுகளின் வளர்ச்சிக்கு அவசியம். வரும் 2047ல் இந்தியா தொழில்நுட்ப வல்லரசு நாடாக மாறும். இதற்கான அனைத்து பணிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சியிலும், சக்திமிக்க நாடாக மாறும். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களில், போட்டி மனப்பான்மையோடு மாணவர்கள் அணுக வேண்டும். அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்.தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மாணவர்களை, நாம் உருவாக்க வேண்டும். வரும் 2028ல் இந்தியாவில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை, சீனாவை விட 65 சதவீதம் அதிகமாக இருக்கும். உலக அளவில் பல்வேறு நிறுவனங்களில், 58 முன்னணி நிறுவனங்களில் தலைமை அதிகாரிகளாக, இந்தியர்களாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இந்திய கல்வி முறையில் படித்தவர்கள். கற்றல், கற்பித்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அமெரிக்காவில் சிலிகான் வேலியில் உள்ள 25 சதவீத நிறுவனங்கள், இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கை, உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்துள்ளது.

760 மெய் நிகர் அறிவியல் ஆய்வகங்கள், 75 திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்க, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில், இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவர் எஸ்.சடகோபன், இயக்குனர் சோமயாஜுலு பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
12-செப்-202218:19:44 IST Report Abuse
ramesh பெட்ரோலியம் பொருட்களின் விலையை ஏற்றி மக்களின் உழைப்பில் வந்த வருமானத்தை சுரண்டுவதில் வேண்டுமானால் உலகின் நம்பர் ஒன் வல்லரசாக மாறலாம்
Rate this:
Cancel
Krishnan G - Chennai,இந்தியா
12-செப்-202209:44:25 IST Report Abuse
Krishnan G காசா பணமா சும்மா வாய்க்குவந்தது வாசுதேவா-னு அள்ளி விடுங்க.... அன்னைக்கு யாருக்கு ஞாபகம் இருந்து யார்கிட்ட கேக்கபோறாங்க.... இப்படித்தான் இந்தியா 2020 ல வல்லரசு ஆகிடும்னு முன்னாடி சொன்னாங்க... இப்ப அதப்பத்தி யார்கிட்டயும் பொய் கேக்கிறோமா அதேபோல்தான் இந்த கதையும்...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-செப்-202205:04:05 IST Report Abuse
NicoleThomsonவல்லரசு தான் அய்யா இதே போன்றதொரு தலைமை இன்னமும் பத்து ஆண்டுகள் இருந்தால் வல்லரசுகள் லிஸ்டில் இருப்போம், மீண்டும் காங்கிரஸ் வந்தால் மறுபடி வளரும் நாடுகள் பட்டியலில் கடன் வாங்கிக்கொண்டு அலைவோம்...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
12-செப்-202209:20:44 IST Report Abuse
NicoleThomson கனவு காணாதீங்க அடுத்து வந்தேறி மதத்தினர் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா ஜுடோ யாத்ரா தலைவர் மீண்டும் சீனர்களை சந்திப்பார் , வேலையை கச்சிதமா முடிப்பர் , நேபாளில் பப்பில் அவர்களது பெண்களுடன் டான்ஸ் ஆடுவர் .
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-செப்-202205:25:07 IST Report Abuse
NicoleThomsonசெக்யூலரிஸம் என்ற பெயரில் பெரும்பான்மை மதத்தினர் பிரிந்து கிடப்பது புத்தியில் சிறுபான்மையினருக்கு சந்தோஷம் தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X