மதுபானத்தை அடுத்து பஸ்கள் வாங்கியதில் ஊழல் புகார்: தள்ளாடுது ஆம் ஆத்மி அரசு | Dinamalar

மதுபானத்தை அடுத்து பஸ்கள் வாங்கியதில் ஊழல் புகார்: தள்ளாடுது ஆம் ஆத்மி அரசு

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | கருத்துகள் (24) | |
புதுடில்லி: டில்லி போக்குவரத்து கழகம், ஆயிரம் கீழ் தள பஸ்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரை சி.பி.ஐ., விசாரிக்க, டில்லி கவர்னர் சக்சேனா அனுமதி வழங்கி உள்ளார். ஏற்கனவே மதுபானம் உரிமம் தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாக விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது 2வது ஊழல் புகார் கிளம்பி உள்ளது. டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, போக்குவரத்து கழகத்திற்கு ஆயிரம்
VinaiSaxena, AAP, DTC,  delhi, LG, AAP, CBI, DTC, BS-VI, GNCTD, DIMTS, JBM, CVC, GFR, TATA, IAS, CM, LG approves CBI  investigation, procurement of 1000 low floor buses by the DTC , Minister of Transport, procurement of 1000 low floor buses, CBI Investigation

புதுடில்லி: டில்லி போக்குவரத்து கழகம், ஆயிரம் கீழ் தள பஸ்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரை சி.பி.ஐ., விசாரிக்க, டில்லி கவர்னர் சக்சேனா அனுமதி வழங்கி உள்ளார். ஏற்கனவே மதுபானம் உரிமம் தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாக விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது 2வது ஊழல் புகார் கிளம்பி உள்ளது.டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, போக்குவரத்து கழகத்திற்கு ஆயிரம் பஸ்கள் வாங்க முடிவு செய்தது. அதில், பிஎஸ் 4 ரகத்தை சேர்ந்த 400 பிஎஸ் 6 ரகத்தில் 600 என ஆயிரம் பஸ்கள் வாங்க கடந்த 2019ல் ஒப்பந்தம் கோரப்பட்டது. பஸ்கள் பராமரிப்பு மற்றும் விநியோகம் தொடர்பாகவும் 2020 மார்ச்சில் ஒப்பந்தம் கோரப்பட்டது. பஸ்கள் வாங்கியது மற்றும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஓபி அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு ஆக., மாதம் அறிக்கை அளித்தது. அதில், ஒப்பந்த நடவடிக்கைகள் மற்றும் பஸ்கள் கொள்முதலில், விதிகள் மீறப்பட்டது தெளிவாக உள்ளதாகவும், அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. போக்குவரத்து கழக தலைவராக, டில்லி போக்குவரத்து அமைச்சர் தான் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.இதனை ஏற்று போக்குவரத்து கழக தலைமை செயலர், இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கவர்னர் சக்சேனாவுக்கு பரிந்துரை வழங்கியிருந்தது. இதனை ஏற்று சிபிஐ விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.latest tamil newsஇது தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில், கவர்னர் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி உள்ளார். அதில் இருந்து மக்களை திசைதிருப்ப இது போன்ற விசாரணைகளுக்கு உத்தரவிடுகிறார். இதுவரை நடந்த அனைத்து விசாரணைகளிலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. ஏற்கனவே முதல்வர், துணை முதல்வர், சுகாதார அமைச்சர் மீது புகார் கூறிய நிலையில் தற்போது நான்காவதாக அமைச்சர் மீது ஊழல் புகார் கூறப்படுகிறது.


தன் மீதான ஊழல் புகாருக்கு கவர்னர் விளக்கம் அளிக்க வேண்டும். பஸ்கள் இன்னும் வாங்கப்படவில்லை. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டில்லிக்கு, இன்னும் அதிகம் படித்த கவர்னர் தேவை. எந்த கோப்பில் கையெழுத்து போட்டுள்ளோம் என்பது கூட அவருக்கு தெரியாது எனக்கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X