நீதிபதி பதவிகளை பெண்கள் அலங்கரிப்பர்சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நம்பிக்கை

Added : செப் 11, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
''அனைத்து மாநிலங்களிலும் நீதிபதி பதவிகளை பெண்கள் விரைவில் அலங்கரிப்பர்,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பேசினார்.புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி பொன் விழா ஆண்டின் நிறைவு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், பொன் விழா ஆண்டின் நினைவு இதழை வெளியிட்டு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்

''அனைத்து மாநிலங்களிலும் நீதிபதி பதவிகளை பெண்கள் விரைவில் அலங்கரிப்பர்,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பேசினார்.

புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி பொன் விழா ஆண்டின் நிறைவு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், பொன் விழா ஆண்டின் நினைவு இதழை வெளியிட்டு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பேசியதாவது: நீதித்துறையில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக வர வேண்டும் என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது. தற்போது நிலை மாறி வருகிறது.பெண்கள் அதிகளவு சட்டம் படிக்க முன் வருகின்றனர். இதனால் வரும் காலத்தில் நீதித்துறையில் அதிகளவு பெண் வக்கீல்களும், நீதிபதிகளும் இடம்பெறுவர்.கடந்த காலங்களில் சுப்ரீம் கோர்ட்டில் ஒன்று அல்லது இரண்டு பெண் நீதிபதி இடம் பெறுவதே அரிதாக இருந்தது. தற்போது நான்கு பெண் நீதிபதிகள் உள்ளனர். வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து பெண்கள் அதிகளவில் இடம்பெறுவர்.இதேபோல், நீதிபதிகள் பணியிடங்களுக்கான நுழைவு நிலையில், பெண்கள் தற்போது அதிக அளவில் இடம் பெறத் துவங்கியுள்ளனர்.

நாட்டில் தற்போது ராஜஸ்தான், ஜார்கண்ட், ஓடிசா, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெண்கள் அதிகளவு நீதிபதிகளாக உள்ளனர்.அனைத்து மாநில நீதிமன்றங்களிலும், விரைவில் நீதிபதி பதவிகளை பெண்கள் அலங்கரிப்பர். இன்றைக்கு சட்டப்படிப்பு முடித்த பிறகு நீதிபதிகளாக, நேரடியாக பணியாற்ற வாய்ப்புள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றங்களில் எவ்வாறு தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பு முறைகள் குறித்து, தேசிய சட்டப் பல்கலை பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சட்டக் கல்லூரிகளிலும் பாடத் திட்டங்களில், தீர்ப்புகள் எப்படி வழங்கப்படுகிறது என்பது இடம் பெற வேண்டும். இது, சட்டம் படித்து, நீதிபதி பணிக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
12-செப்-202209:09:47 IST Report Abuse
R.RAMACHANDRAN நீதி மன்றங்களில் சாமான்ய மக்களுக்கு சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது ஆவண சாட்சியங்கள் அடிப்படையிலோ தீர்ப்புகள் வழங்குவதில்லை.காரணம் இந்த கால கட்டத்தில் ஒரு வழக்கிற்கு கோடி கணக்கான ரூபாய் செலவு செய்து அவர்கள் உச்ச நீதி மன்றம் வரை செல்ல முடியாது என்பதே.ஆண்கள் அல்லது பெண்கள் நீதிபதிகளாக வந்தாலும் இந்த நிலை மாற/மாற்றப் போவது இல்லை இந்நாட்டில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X