காஷ்மீர் சிறப்பு சட்டம் மீண்டும் வராது: குலாம் நபி ஆசாத்

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 மீண்டும் வராது என காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.பாரமுல்லாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது: 370 சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வர முடியாது. இந்த சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவதற்கு பார்லிமென்டில் 3ல் 2 பங்கு ஆதரவு தேவை. 370 என்ற பெயரில்
kashmir, gulamnabiazad, special status, congress, GN Azad, காஷ்மீர், சிறப்பு சட்டம், குலாம் நபி ஆசாத்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 மீண்டும் வராது என காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

பாரமுல்லாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது: 370 சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வர முடியாது. இந்த சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவதற்கு பார்லிமென்டில் 3ல் 2 பங்கு ஆதரவு தேவை. 370 என்ற பெயரில் மக்களை ஏமாற்ற கட்சிகளை நான் அனுமதிக்க மாட்டேன். மக்களை தவறாக வழிநடத்த அனுமதிக்க மாட்டேன். அந்த சட்டம் மீண்டும் வராது.


latest tamil news


காஷ்மீரில் அரசியல் சுரண்டலால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சம் குழந்தைகள் அனாதைகளாகி உள்ளனர். தவறான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. என்னை பாதித்தாலும், என்னால் என்ன முடியுமோ அதை பற்றி மட்டுமே பேசுவேன்.

புதிய கட்சி குறித்து 10 நாட்களில் அறிவிக்கப்படும். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை பெறவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் மக்கள் மீண்டும் என்னை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-202210:58:50 IST Report Abuse
venugopal s காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து பல வருடங்களுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சியிலேயே செய்திருக்க வேண்டியது.பாஜக அதைச் செய்து நல்ல பெயர் பெற்றது.இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் நடக்காது.
Rate this:
Cancel
12-செப்-202208:17:41 IST Report Abuse
S SRINIVASAN very good Mr Azad, your thinking is in right directionpl treat everyone including pandits and take the kashmir to next level.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-செப்-202205:27:40 IST Report Abuse
Kasimani Baskaran காஷ்மீரில் ஆட்சியை பிடிக்கப்போகிறாரா? சிரமம் என்றுதான் நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X