ராணி இரண்டாம் எலிசபெத்தின் எதிர்ப்பாளரா மிஸ்டர் பீன்?

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பிரபல இங்கிலாந்து நகைச்சுவை நடிகரான ரோவன் அட்கின்ஸனுக்கு தற்போது 67 வயதாகிறது. இந்த வயதிலும் 'மேன் வெர்சஸ் பீ' உள்ளிட்ட பல வெப் சீரீஸ்களில் நடித்துவருகிறார் ரோவன். இவரது மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தை அறியாதவர்களே இருக்க மாட்டர். உலகமே இவரது சேஷ்டைகளை ரசித்து சிரித்து மகிழ்ந்த காலங்கள் அவ்வளவு சீக்கிரம் நமது நினைவை விட்டு அகலாது. ரோவனின் பெருவாரியான ரசிகர்கள்
ராணி இரண்டாம் எலிசபெத் மரணம், மிஸ்டர் பீன், ரோவன் அட்கின்ஸன், queen elizabeth death, rowan atkinson, mr bean

பிரபல இங்கிலாந்து நகைச்சுவை நடிகரான ரோவன் அட்கின்ஸனுக்கு தற்போது 67 வயதாகிறது. இந்த வயதிலும் 'மேன் வெர்சஸ் பீ' உள்ளிட்ட பல வெப் சீரீஸ்களில் நடித்துவருகிறார் ரோவன். இவரது மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தை அறியாதவர்களே இருக்க மாட்டர். உலகமே இவரது சேஷ்டைகளை ரசித்து சிரித்து மகிழ்ந்த காலங்கள் அவ்வளவு சீக்கிரம் நமது நினைவை விட்டு அகலாது.

ரோவனின் பெருவாரியான ரசிகர்கள் அவர் மிஸ்டர் பீன் கதாப்பாத்திரத்தை வைத்தே படங்கள் நடிப்பதை விரும்பினர். இதனை அறிந்த அவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களை கிண்டலடிக்கும் வகையில் ஜானி இங்லீஷ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கினார். இந்த படத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி போல வேடமிட்ட ஒரு கொலைகாரி ரோவனை தனது வாளால் வெட்ட வருவர்.


latest tamil newsஅவரிடம் இருந்து ரோவன் சாதுர்யமாகத் தப்பி ஓடுவார். பல அறைகள் கொண்ட அரண்மனையில் ஓடும் ரோவன் நிஜ ராணியை கொலைகாரி எனத் தவறாக நினைத்து பிடித்து இழுத்து வருவார். அவரது முகத்தைப் பார்க்காமல் அவரது மண்டையில் ஸ்டீல் பிளேட்டைக் கொண்டு தாக்குவார்.

அப்போது ராணியின் பாதுகாவலர்கள் ராணி போல வேடமிட்ட கொலைகாரியைப் பிடித்து இழுத்து வருவர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரோவன் தான் உண்மையான ராணியை மூர்க்கமாகத் தாக்கியதை உணர்ந்து பயத்தில் விழிப்பார். ரோவன் ராணி 2-ம் எலிசபெத்தை கிண்டலடிப்பது இது முதல் முறை அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது காமெடி ஷோ ஒன்றிலும் ராணியைத் தாக்கியிருப்பார். ராணிக்கு மரியாதை செலுத்த வரிசையின் நின்று கொண்டு அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதாக நினைத்து அவருக்கே உரித்தான பாணியில் சேஷ்டைகள் பல செய்துகொண்டிருப்பார்.


latest tamil newsராணி அருகில் வந்ததும் தலை குனிந்து அவருக்கு மரியாதை செலுத்துவதாக நினைத்து வேகமாக ராணியின் தலையில் முட்டுவார். இதனால் ராணி நிலைகுலைந்து கீழே விழ, இடத்தை விட்டு ஓட்டம் பிடிப்பார் மிஸ்டர் பீன். இதுபோன்ற தனது தொடர் நிகழ்ச்சிகளால் பக்கிங்ஹாம் மன்னர் அதிகாரத்தை ரோவன் எதிர்க்கிறாரா எனவும் விவாதம் ஏற்பட்டது.


latest tamil newsஆனால் நிஜத்தின் ரோவன் ராணியை ஒருமுறை நேரில் சந்தித்து மிகுந்த மரியாதையுடன் பேசி மகிழ்ந்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரோவன் தன்னை அவரது படங்களில் கிண்டலடிப்பதை ராணி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு அப்போது பிரபலமாக இருந்த ஜேம்ஸ் பாண்ட் பாத்திரமேற்று நடித்த நடிகர் டேனியல் கிரேக் உடன் நகைச்சுவை விளம்பரம் ஒன்றில் ராணி 2ம் எலிசபெத் நடித்திருப்பார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் இதன் படப்பிடிப்புக்கு அவர் அப்போது அனுமதியும் வழங்கி இருந்தார். இதன்மூலம் ராணி தன்மீதான விமர்சனம், கிண்டல், பாராட்டு என அனைத்தையும் இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர் என்பது தெளிவாகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
11-செப்-202222:37:20 IST Report Abuse
சீனி மிஸ்டர் பீன், சார்லசின் நெருங்கிய நண்பராவார்,இங்கிலாந்து அரச குடும்ப நிகழ்ச்சிகளில் அவருக்கு தொடர்ந்து அழைப்பிருக்க்கும் அளவுக்கு நட்புள்ளவர். மிஸ்டர் பீன் தொழில் தமாசு பண்ணுவது தான், யாரை வேண்டுமானால் தாமசு பண்ணுவார், அது தான் அவர் வெற்றிக்கும் காரணம். நமக்கும், மேற்க்குக்கும் வித்தியாசமே, அவர்கள் தமாசை தமாசாக எடுத்துக்கொள்வது தான். ஆனா நம்ம ஊரில் வாழையாடி வாழையாக ஆட்சி செய்யும் ராஜாதிராஜநிதி பரம்பரை மன்னர்களை கிண்டலடித்தால், சிறையில் வைத்து கும்மி எடுத்துவிடுவார்கள்.
Rate this:
Cancel
rAstha - Chennai,இந்தியா
11-செப்-202221:31:34 IST Report Abuse
rAstha அவர் ராணியை கிண்டல் செய்தாரா இல்லையா? அதுபற்றி யாருக்கு கவலை. அந்த மிஸ்டர் பீன் கதாபாத்திரமே யாரை கிண்டல் செய்து என்பது தெரிந்தால், நாம் இந்தியர் அனைவரும் மிஸ்டர் பீன் ஐ பார்க்க அவமானப்படுவோம். பீட்டர் செல்லேர்ஸ் எனும் ஆங்கிலேய நடிகர், இந்தியர்களின் அடக்க (சரி சரி அடிமைத்துவ) குணத்தினால், பொது இடங்களில் தயங்குவதையும் அதனால் விளையும் சங்கடங்களையும் கேலிசெய்து 1968ல் வெளியான 'The Party' என்ற திரைப்படத்தில் பக்க்ஷி எனும் இந்தியராக நடித்தார். ரோவன் அட்கின்ஸன் மிஸ்டர் பீன் ஐ உருவாக்கியது, 'The Party' யில் வந்த பக்க்ஷி என்ற கதாபாத்திரத்தை பார்த்துதான் (அவரே ஒரு பேட்டியில் கூறியது ). மிஸ்டர் பீனாக நாம் பார்ப்பது நம்மைத்தான் என அறிக. Tail Piece: பீட்டர் செல்லேர்ஸ் நடிப்பாற்றலை வியந்து, தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பினார் சத்யஜித் ரே. பின் 'The Party' பற்றி அறிந்தவுடன் பீட்டர் செல்லேர்ஸின் படங்களை பார்ப்பதையே தவிர்த்து விட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X