ஊராட்சி துாய்மை பணியாளர் பிரசார பயணம்

Added : செப் 11, 2022 | |
Advertisement
திருப்பூர்:ஊராட்சி குடிநீர் ஆபரேட்டர், துாய்மை பணியாளர் மற்றும் துாய்மை காவலருக்கான கோரிக்கைகளுக்கு, அரசாணை வெளியிடக்கோரி, பிரசார பயணம் துவங்கியுள்ளது.கொரோனா ஊக்கத்தொகையாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடிநீர் ஆப்ரேட்டர், துாய்மை பணியாளர் காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். ஆபரேட்டர் அனைவருக்கும், 7,040 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்; 1972 பணிக்கெடை பட்டுவாடா

திருப்பூர்:ஊராட்சி குடிநீர் ஆபரேட்டர், துாய்மை பணியாளர் மற்றும் துாய்மை காவலருக்கான கோரிக்கைகளுக்கு, அரசாணை வெளியிடக்கோரி, பிரசார பயணம் துவங்கியுள்ளது.கொரோனா ஊக்கத்தொகையாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடிநீர் ஆப்ரேட்டர், துாய்மை பணியாளர் காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். ஆபரேட்டர் அனைவருக்கும், 7,040 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்; 1972 பணிக்கெடை பட்டுவாடா சட்டப்படி, ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடையும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் அனைவருக்கும் வழங்கி, அதுதொடர்பான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். தாமதமின்றி சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்க வேண்டும்; வாரிசு வேலை மற்றும் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டம் வாரியாக பிரசார பயணம் துவங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் சங்கத்தினர் கூறியதாவது:ஊராட்சிகளில், எவ்வித பணி பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றி வரும், குடிநீர் ஆபரேட்டர்களுக்கும், துாய்மை பணியாளர், துாய்மை காவலருக்கான கோரிக்கையை, அரசாணையாக வெளியிடக்கோரி, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கோரிக்கையை விளக்கியும், கோரிக்கைக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தியும், மாவட்டம் வாரியாக பிரசார பயணம் துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து ஒன்றியங்களிலும், கடந்த இரண்டு நாட்களாக, பிரசார பயணம் நடந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X