ஏற்றுமதியாளர் சங்க தேர்தல்; இன்று மனு பரிசீலனை

Added : செப் 11, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தலில், வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு, போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப் படுகிறது.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல், வரும் 30ம் தேதி நடக்கிறது. கடந்த 9ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தநிலையில், மொத்தம் 27 பதவிகளுக்கு 42 பேர் மனு தாக்கல்

திருப்பூர்:திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தலில், வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு, போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப் படுகிறது.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல், வரும் 30ம் தேதி நடக்கிறது. கடந்த 9ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தநிலையில், மொத்தம் 27 பதவிகளுக்கு 42 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.அடிப்படை தகுதிகளுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர்கள், 2018 முதல் நடப்பு 2022ம் ஆண்டு வரை, ஐந்து ஆண்டுகளுக்கான சந்தா தொகையை செலுத்தியிருப்பது கட்டாயம். சங்க விதிமுறைகள்படி, வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்று தகுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் 14ம் தேதி வரை வேட்பு மனு வாபஸ் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு, 15ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு போட்டியில்லை. கே.எம். நிட்வேர் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியம் தலைவராவதும், திருக்குமரன் பொதுச்செயலாளராவதும் உறுதியாகியுள்ளது. 2 துணை தலைவர் பதவிக்கு 3 பேர்; 2 இணை செயலாளர் பதவிக்கு 3 பேர்; பொருளாளர் பதவிக்கு 2 பேர் மற்றும் 20 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 32 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் உள்ளதால், எந்தெந்த பதவிகளுக்கு தேர்தல் என்பது 15ம் தேதி தெரியவரும். போட்டி உள்ள பதவிகளுக்கு மட்டும், வரும் 30ம் தேதி காலை, 'நிப்ட்- டீ' கல்லுாரியில், தேர்தல் நடைபெறும். அன்று மாலை நடைபெறும் பொதுக்குழுவில், புதிய நிர்வாகிகள் பதவியேற்கின்றனர்.கே.எம். நிட்வேர் சுப்பிரமணியம் தலைவராவதும், திருக்குமரன் பொதுச்செயலாளராவதும் உறுதியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X