மோடி கபடி லீக்: ஜோதிக்கு வரவேற்பு

Added : செப் 11, 2022 | |
Advertisement
திருப்பூர்:பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில், அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து, மோடி கபடி லீக் போட்டி, 17ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு, மோடி கபடி லீக் ஜோதி, மாவட்டம் வாரியாக, தொடர் ஓட்டமாக சென்று கொண்டிருக்கிறது.திருப்பூர் பல்லடம் ரோடு, குன்னாங்கல் பாளையம் விவித் கார்டனில், 17, 18ம் தேதிகளில், கபடி போட்டி நடக்கிறது. மாவட்ட போட்டிகளில் வெற்றி
மோடி கபடி லீக்: ஜோதிக்கு வரவேற்பு

திருப்பூர்:பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில், அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து, மோடி கபடி லீக் போட்டி, 17ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு, மோடி கபடி லீக் ஜோதி, மாவட்டம் வாரியாக, தொடர் ஓட்டமாக சென்று கொண்டிருக்கிறது.திருப்பூர் பல்லடம் ரோடு, குன்னாங்கல் பாளையம் விவித் கார்டனில், 17, 18ம் தேதிகளில், கபடி போட்டி நடக்கிறது. மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கான மாநில போட்டி, 27 28, 30 ஆகிய தேதிகளில், மதுரையில் நடக்கிறது. 'லீக்' இறுதி போட்டி, 30ம் தேதி மதுரையில் நடக்கிறது.முதல் பரிசாக, 15 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 10 லட்சம் ரூபாய், மூன்று மற்றும் நான்காம் பரிசாக, தலா, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று, மாவட்டம் வாரியாக வலம் வரும், மோடி கபடி லீக் ஜோதி, நேற்று திருப்பூர் வந்தடைந்தது.திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் விசாகன், கபடி லீக் ஜோதியை, நேற்று திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். விளையாட்டு பிரிவு தலைவர் மகேஷ், பெற்றுக்கொண்டார்.பல்லடம், அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில், கலெக்டர் அலுவலகம், காங்கயம் ரோடு வழியாக, கபடி லீக் ஜோதி, நேற்று, மாவட்ட கபடி சங்க அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. நீச்சல் வீராங்கனை அர்ச்சனா முன்னிலையில், திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையிலான குழுவினர் பெற்றுக்கொண்டனர்.கபடி கழக சேர்மன் முருகேசன், மாநில பொருளாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் ஆறுச்சாமி, நடுவர் குழு சேர்மன் முத்துசாமி, பா.ஜ., மண்டல் தலைவர் அங்குராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட தலைவர் செந்தில்வேல் பேசுகையில்,''பா.ஜ.,வில் மட்டுமே, விளையாட்டு இளைஞர் நல பிரிவு துவங்கி, இளைஞர்கள் அதிக அளவு இணைக்கப்பட்டு வருகின்றனர்.மத்திய அரசு விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து வருகிறது. பாரத மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்க, மத்திய அரசு பாடுபட்டு வருகிறது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X