மாயமான பெண் கொலை?| Dinamalar

மாயமான பெண் கொலை?

Added : செப் 11, 2022 | |
திருப்பூர்:ஊதியூர் அருகே, கரியாக்கவுண்டன் புதுாரைச் சேர்ந்தவர் ரத்தினசாமி; இவரது மனைவி ரேவதி, 35. கணவர் மற்றும் மகன் ஹர்ஷித், 8 ஆகியோருடன் வசித்துவந்தார்; வஞ்சிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், ரேவதி வேலைக்கு சென்றுவந்தார்.நேற்றுமுன்தினம் மதியம் 3:00 மணி அளவில், பணி முடித்து காட்டுப்பாதை வழியாக வந்த ரேவதி, வீடு திரும்பவில்லை. நேற்று காலை உறவினர்கள் தேடியபோது,

திருப்பூர்:ஊதியூர் அருகே, கரியாக்கவுண்டன் புதுாரைச் சேர்ந்தவர் ரத்தினசாமி; இவரது மனைவி ரேவதி, 35. கணவர் மற்றும் மகன் ஹர்ஷித், 8 ஆகியோருடன் வசித்துவந்தார்; வஞ்சிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், ரேவதி வேலைக்கு சென்றுவந்தார்.நேற்றுமுன்தினம் மதியம் 3:00 மணி அளவில், பணி முடித்து காட்டுப்பாதை வழியாக வந்த ரேவதி, வீடு திரும்பவில்லை. நேற்று காலை உறவினர்கள் தேடியபோது, கண்ணாங்காட்டு தோட்டம் பகுதியில், ரேவதியின் மதிய உணவு பை மற்றும் ரேவதி அணிந்திருந்த செருப்பு கிடந்துள்ளன. தொடர்ந்து தேடியபோது, பி.ஏ.பி., கிளை வாய்க்கால் கரையோரம் முட்புதர் அருகே ரேவதி உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.ஊதியூர் போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய், சிறிது துாரம் ஓடிச்சென்று நின்றது. காங்கயம் டி.எஸ்.டி., பார்த்திபன் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். ரேவதியின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ரேவதி கொலை செய்யப்பட்டாரா, எதற்காக கொலை செய்துள்ளனர் என, போலீசார் விசாரணை நடத்திருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X