முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 138 அடியை கடந்தது| Dinamalar

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 138 அடியை கடந்தது

Added : செப் 11, 2022 | |
கூடலுார் : முல்லை பெரியாறு அணை பகுதியில் பெய்யும் தொடர் மழையால் நீர் மட்டம் 138 அடியை கடந்தது.சில நாட்களாக இந்த அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் 10.4 மி.மீ., தேக்கடியில் 9.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2534 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 138.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர்
முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 138 அடியை கடந்தது

கூடலுார் : முல்லை பெரியாறு அணை பகுதியில் பெய்யும் தொடர் மழையால் நீர் மட்டம் 138 அடியை கடந்தது.

சில நாட்களாக இந்த அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் 10.4 மி.மீ., தேக்கடியில் 9.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2534 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 138.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 6647 மில்லியன் கன அடியாகும்.



தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1867 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும்மழை பெய்யவில்லை. 'ரூல்கர்வ்' விதிமுறைப்படி செப்., 20 வரை 142 அடி தேக்கலாம். இந்தாண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடியை தேக்குவதற்கு மழை இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X