பொங்காளியம்மன் கோவிலில் விரைவில் திருப்பணிகள்| Dinamalar

பொங்காளியம்மன் கோவிலில் விரைவில் திருப்பணிகள்

Added : செப் 11, 2022 | |
பல்லடம்:பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில் நுாற்றாண்டு பழமையான பொங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிேஷகம் தொடர்பாக, கோவில் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.கோவில் கமிட்டி நிர்வாகிகள் கூறுகையில், 'காம்பவுண்ட் சுவர், தளம் அமைக்கும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளும் போது முறையாக அளவீடு செய்து தர வேண்டும். திருப்பணி நடைபெறுவது குறித்தும், பாலாலய
பொங்காளியம்மன் கோவிலில் விரைவில் திருப்பணிகள்

பல்லடம்:பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில் நுாற்றாண்டு பழமையான பொங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிேஷகம் தொடர்பாக, கோவில் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.கோவில் கமிட்டி நிர்வாகிகள் கூறுகையில், 'காம்பவுண்ட் சுவர், தளம் அமைக்கும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளும் போது முறையாக அளவீடு செய்து தர வேண்டும். திருப்பணி நடைபெறுவது குறித்தும், பாலாலய கும்பாபிஷேகம் தொடர்பாகவும் பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கோவிலுக்குள் பேனர் வைக்க வேண்டும்'' என்றனர்.கோவில் செயல் அலுவலர் பிரேமா பேசுகையில், 'பாலாலயம் செய்தபின் தான் திருப்பணிக்கு அனுமதி பெற முடியும். எனவே, திருப்பணிக்கான தேதியை முதலில் முடிவு செய்ய வேண்டும். அக்., 23, 28, நவ., 11, 13, 14 உள்ளிட்ட தேதிகள் திருப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஸ்தபதி யார், கும்பாபிஷேக தேதி ஆகியவற்றை விரைந்து தீர்மானியுங்கள்.பணியின்போது, சர்வேயர் மூலம் உரிய அளவீடு செய்யப்படும். இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பணிகள் துவங்கும். அரசு கோவில் என்பதால் அரசே எல்லாம் செய்துவிடாது. கோவில் திருப்பணி செய்தபின், கோவில் வளர்ச்சி பெறும்போது கிடைக்கும் வருவாய் மூலம் கோவிலில் அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளலாம். உபயதாரர் பொறுப்பெடுத்து திருப்பணி செய்ய வேண்டும். சில நேரங்களில் குளறுபடி ஏற்படுவதால், திருப்பணி வசூல் செய்ய அனுமதி தரப்படவில்லை. கோவில் கமிட்டியினரான நீங்கள் தான் பொறுப்பெடுத்து கொள்ள வேண்டும்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X